Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) எதிர்பாராத நன்மை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆற்றல் மேம்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:26

வாழ்வில் முன்னுதாரணமாகத் திகழும் மீன ராசி நேயர்களே!

கேது, குரு இருவரும் மாதம் முழுவதும் நற்பலன் தருவர்.  சுக்கிரன் மார்ச் 3-ல் சாதகமான இடத்துக்கு வருவதால் நன்மையை எதிர்பார்க்கலாம்.  மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் பாதகம் உண்டாகாது.  சந்திரன் பெரும்பாலான நாட்களில் சாதக பலன் தர காத்திருக்கிறார். காரியங்களை கச்சிதமாக முடிக்க, கேது உங்களுக்கு துணை நிற்பார். ஆற்றல் மேம்படுவதால் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.

குருபகவான் பிப்.14-ல் அதிசாரம் பெற்று 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். இது வரை அவரால் ஏற்பட்ட பிரச்னை அனைத்தும் மறையும்.  மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  தம்பதிஇடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க வாய்ப்புண்டு. குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான  சூழல் உருவாகும்.  மார்ச் 2-க்கு பிறகு பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  பிப்.13,14,15, மார்ச்13,14-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.25,26ல் அவர்களால் பிரச்னைக்கு ஆளாகலாம் கவனம். மார்ச்4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.  பிப்.18,19,20ல் சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.  

பிப். 26-க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். செவ்வாயால் உடல் ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி உருவாகலாம். ஆனாலும் கேது, குருவின் சாதக பலனால் பண வரவு அதிகமாக இருக்கும். மார்ச் 2- க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பிப்.16,17,21,22-ல்
சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.  மார்ச் 1,2-ல் எதிர்பாராத வகையில் பணம் வரலாம். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.  மார்ச்9-க்கு பிறகு, பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  குருவால் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.  சூரியனால் விரும்பிய இடமாற்றத்தை காணலாம். மார்ச் 10,11,12- ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.  பிப்ரவரி 26-க்கு பிறகு தனியார் துறையில் வேலையில் இருப்பவர்கள் அக்கறையுடன் பணியாற்றவும். கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும் மார்ச் 2க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  உங்கள் முன்னேற்றத்தில், பெண்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.  பொதுநல சேவகர்கள், அரசியல் வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். பிப். 27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.  சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்க பெறுவர். பிப்.26-க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மஞ்சள், நெல், கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும். கால்நடை மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குதூகல வாழ்வு காண்பர்.    மார்ச் 3,4,5- ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.23,24- ல் புத்தாடை-, அணிகலன் வாங்கலாம். இருப்பினும் குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும்.   புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நல்ல நாள்: பிப்.13, 14, 15, 18, 19, 20, 23, 24 , மார்ச் 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13,14
கவன நாள்:  மார்ச் 6,7- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 6; நிறம்:  மஞ்சள், சிவப்பு  

* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
* வெள்ளியன்று மாலையில் அம்மன் வழிபாடு

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.