அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி புனர்பூசம் நட்சத்திரத்தில் நந்தி – சுயசாம்பிகை திருமணம் நடக்கும். இந்த ஆண்டு மார்ச்26ல் இரவு 7:00 மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். இதை தரிசிக்க விரைவில் திருமணம் கைகூடும். ‘நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்’ என்பது சொல் வழக்கு. இந்தக் கோயிலுக்கு அரியலூர், தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து செல்லலாம். தூரம் 28 கி.மீ.,