Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அமோக ஆதாயம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:22

மற்றவர் குறையை மன்னிக்கும் மகர ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. இருந்தாலும் மே4ல் புதன் சாதக இடமான மேஷத்திற்கு வருகிறார். சுக்கிரன் ஏப்.21ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். அது வரை முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று சிந்தித்தே செயல்படுவது நல்லது. அதன் பிறகு பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்ஏப்.20க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் பணவரவு சீராக இருக்கும். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். மே 6,7,8ல்  சகோதரிகளால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே1,2,3ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஏப்.16,17, மே 14ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். எனவே அப்போது  சற்று விலகி யிருக்கவும்.

தொழில், வியாபாரம்  சீரான வளர்ச்சி பெறும். ஆனால் மறைமுகப் போட்டியால் பிரச்னை குறுக்கிடலாம். மே 4,5,9,10ல் சந்திரனால்  தடைகள் வரலாம். ஏப்.21,22ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு  மே3க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

பணியாளர்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மே 3க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.  அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். ஏப்.29,30ல் பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்கள் உற்சாகமாக செயல்பட்டு முன்னேறுவர். சக பெண்கலைஞர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பர். ஆனால் புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்காது. ஏப்.18,19,20 ல் மனதில் சஞ்சலம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். மே 3க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.  

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். ஆனால், புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள் உற்சாகமுடன் செயல்படுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். மே 3 க்கு பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஏப்.14,15, மே 11,12,13ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். ஏப்.23,24ல் சகோதரர் மூலம் பணஉதவி கிடைக்கும். கேதுவால் அக்கம்பக்கத்தினரின்  தொல்லை வரலாம். ராகுவால் வீண்அலைச்சல் ஏற்படும். சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் ஏற்பட்ட பித்தம், மயக்கம் போன்ற உபாதை மே1க்கு பிறகு மறையும்.

* நல்ல நாள்: ஏப்.14,15,21,22,23,24,29,30 மே1,2,3,6,7,8,11,12,13
* கவன நாள்: ஏப். 25,26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்- வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
* ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
* வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு நெய் தீபம்
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.