Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக சுற்றுலா மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அரசு வகையில் நன்மை மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அமோக ஆதாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:23

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே!

ராசிக்கு 3-ம் இடத்தில் இணைந்திருக்கும்  சுக்கிரனும், சூரியனும் நற்பலன் தருவர்.  6-ம் இடத்தில் இருக்கும் ராகு, 9-ம் இடத்தில் இருக்கும் குரு, 11-ம் இடத்தில் இருக்கும் சனி தொடர்ந்து நன்மையை வாரி வழங்குவர்.  செவ்வாய் மே1 வரை சாதகமாக நின்று நற்பலன் தருவார். பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் காரிய ங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். மனதிலும், உடலிலும் புத்துணர்வு வெளிப்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள்  உறுதுணையாகசெயல்படுவர்.  

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை  உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏப்.20க்கு பிறகு எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மே 9,10ல் பெண்களின் ஆதரவு கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப்.18,19,20ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். அதே நேரம் மே 4,5ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஏப்.16,17ல் புத்தாடை, அணிகலன் வாங்க வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரத்தில் சனி பலத்தால் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அமோக ஆதாயம் கிடைக்கும். குடும்ப பிரச்சினையில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழு கவனத்தை செலுத்தலாம்.  சிலர் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுப்படுத்தலாம். மே 3க்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப்.14,15 மே 11,12,13ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.23,24ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்களுக்கு மாத முற்பகுதியில் வேலையில் பொறுமை யும், நிதானமும் தேவை. இருப்பினும் சுக்கிரனால் வருமான த்திற்கு குறைவிருக்காது.  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே1க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.  மே3க்கு பிறகு அரசு பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். மே1,2,3 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர் களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஏப்.30, மே1ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கூடுதல் அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆனால் குரு சாதகமான நிலையில் இருப்பதால் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழி காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். செவ்வாய் சாதகமாக காணப்படுவதால் புதிய சொத்து வாங்க அதிக வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். மே1க்கு  பிறகு புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குரு சாதகமான நிலையில் உள்ளதால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.  தடைபட்ட திருமணம்  நடந்தேறும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். ஏப்.25,26ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். உடல்நலம் சிறப்படையும். ஆனால் மே1க்கு பிறகு செவ்வாயால்  பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.

* நல்ல நாள்: ஏப்.23,24,25,26, மே 1,2,3,4,5,9,10,14
* கவன நாள்: ஏப்.27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட  எண்: 1,7,9 நிறம்: சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:

* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* புனர்பூசத்தன்று ராமபிரானுக்கு நெய்தீபம்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.