Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அதிர்ஷ்டம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) உற்சாகம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
17:50

சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், கேது,10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் ஆகிய மூவரும் வளர்ச்சிக்கான வாய்ப்பை அள்ளித் தருவர். ஜூன் 10 வரை சுக்கிரன் மிதுனத்தில் இருந்து நற்பலன் தருவார். மே 21 க்கு பிறகு புதன் 10-ம் இடத்திற்கு மாறியும், ஜூன் 6ல் 11-ம் இடத்திற்கு மாறியும் நற்பலனை கொடுப்பார். ஆனால் 3ல் இருக்கும் குரு, 12ல் இருக்கும் ராகுவால் சுமாரான பலனே உண்டாகும்.

குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளன. தடைகளை முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். மே 21க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
பெண்களால் பொன், பொருள் சேரும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் நிரந்தரமாக ஒன்று சேரும் சூழல் உருவாகும். மே 22,23 ல் சகோதரவழியில் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே 18,19 ஜூன் 14ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 29,30ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

மே 21க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

தொழில், வியாபாரத்தில் தீயோர் நட்பால் பணத்தை விரயமாக்கி யவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மே 21க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு வியாபாரம் சிறப்படையும். லாபத்திற்கு குறை விருக்காது.

உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் அதிக வருமானம் கிடைக்க பெறலாம்.மே 20,21,24,25ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 3,4ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

ஜூன் 6க்கு பிறகு தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பணியாளர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன மே 21க்கு பிறகு மறையும். அதன்பின் பணியிடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மே 16,17 ஜூன் 12,13 ஆகியவை முன்னேற்றம் தரும் நாட்களாக அமையும்.

கலைஞர்கள் சக பெண் கலைஞர்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருமானம் உயரும். ஜூன் 10க்கு பிறகு முயற்சிக்கு தக்க முன்னேற்றம் உண்டாகும்.
அதேநேரம் உங்கள் கவுரவத்திற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்- தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். மே 21க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பக்கத்து நிலத்தினர் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்கள் விருப்பம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். தோழிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவர். பணியில் ஈடுபடும் பெண்கள் வேலையில் நிம்மதி, திருப்தி  பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. மே 26,27,28ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: மே 16,17, 18,19,22,23,26,27,28 ஜூன் 3,4,5,6,12,13,14
* கவன நாள்: ஜூன் 7,8,9. சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,7,9
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
●  ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு
●  வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு நெய் விளக்கு
●  சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை

 
மேலும் ஐப்பசி ராசிபலன் (18.10.2018 – 16.11.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

சாதகமற்ற நிலையில் இருந்த புதன், செவ்வாய் இந்த மாதம் ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் இந்த ... மேலும்
 
temple
பிறர் நலனில் அக்கறை காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நற்பலன் தரக் ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு,சுக்கிரன்,சனி நற்பலன் கொடுப்பர். அதோடு புதன் அக்.23 ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் முன்னேறும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோர் சாதகமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.