Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அதிர்ஷ்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அதிர்ஷ்டம்

பதிவு செய்த நாள்

15 மே
2018
05:05

கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து நற்பலன் தர காத்திருக்கிறார். புதன் ஜூன் 6 வரை நன்மை கொடுப்பார். சுக்கிரனால் ஜூன் 10க்கு பிறகு அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் ராசியில் இருக்கும் ராகு, 7-ல் உள்ள செவ்வாய், கேது ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கப் பெறுவீர்கள். குரு 4-ம் இடமான துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் நன்மை ஏதும் தரமாட்டார். ஆனால் சனி 6-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பொருளாதார வளம் தருவார். இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார்.

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். ஜூன் 10க்கு பிறகு பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். மே 16,17, ஜூன் 12,13ல் உறவினர் வருகையும் அவர்களால்
நன்மையும் கிடைக்கும். ஆனால் மே 26,27,28ல் உறவினர்கள்
வகையில் கருத்துவேறுபாடு உருவாகி மறையும். மே 20,21ல் சகோதரிகளால் நன்மை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். மே 24,25ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.

தொழில், வியாபாரத்தில் பணவரவுக்கு குறைவிருக்காது. மாதத் தொடக்கத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.

சனி, சூரியனால் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். உங்களிடம் வேலை பார்ப்பவர் நன்றி யுடன் செயல்படுவர். அரசு வகையில் சலுகையை எதிர்பார்க் கலாம். வங்கி கடன் கிடைக்கும்.

மே 18,19,22,23, ஜூன் 14ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். மே31  ஜூன் 1,2ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஜூன் 6க்குப் பிறகு எதிரி தொல்லை உருவாகலாம்.

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். புதன், சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால் தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை குறையும். இடமாற்ற பீதி மறையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஜூன் 10க்கு பிறகு சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மே 15, ஜூன் 10, 11 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் குறுக்கிட்ட தடை  ஜூன் 10க்கு பிறகு மறையும். அதன் பின் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடலாம். மே 29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  ஜூன் 10க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகள் சிறுதானியம், பயிறு வகைகள் மற்றும் பசுவளர்ப்பு மூலம் வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்க நினைப்பவர் களின் எண்ணம்  ஜூன் 10க்குப் பிறகு கைகூடும்.
வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு உண்டு

பெண்கள் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். அண்டை வீட்டாருடன் நட்பு மேலோங்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விரும்பிய புதிய பதவி தேடி வரும். ஜூன் 6க்குப் பிறகு வேலையில் பொறுமை, நிதானம் தேவைப்படும். மே 24,25 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகம் உண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம்.  ஜூன் 3,4 ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும்.

* நல்ல நாள்: ÷©15,16,17, 20, 21,24, 25,31, ஜூன் 1,2,3, 4,10,11,12,13
* கவன நாள்: ஜூன் 5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3,7
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:

●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபி÷åPம்
●  ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar