Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) லாபம் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மதிப்பு மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) இனிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
18:00

குணத்தில் குன்றாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் மே 21ல் 4-ம் இடத்திற்கு செல்லும் புதன், அனுகூல பலன் தர காத்திருக்கிறார். ஜூன் 10 வரை சுக்கிரன் மிதுனத்தில் இருந்து நன்மை தருவார். குரு,சனி, ராகு, சந்திரன் மாதம் முழுவதும் நன்மை அளிப்பர். குருவால் வாழ்வில் இனிமை சேரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை குறையின்றி பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று திகழ்வீர்கள்.

சுக்கிரனால் சமூக மதிப்பு உயரும். மே 21க்கு பிறகு புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். இதனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. ஜூன் 5,6ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் வகையில் அனுகூல மான போக்கு காணப்படும். பணஉதவி கிடைக்கும். மே31  ஜூன் 1,2ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
ஆனால் மே 24, 25,  ஜூன்4ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மே 16க்கு பிறகு பெரியோரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும்.

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில் வளர்ச்சி முகமாக அமையும். பழைய கடன்கள் அடைபடும்.

சூரியனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மே 16க்கு பிறகு கோயில் மற்றும்
புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.  ஜூன் 3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். மே 20,21ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறலாம். ஜூன்6க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்டவசமாக பதவி உயர்வு கிடைக்கும். மே 21க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். மே 29,30ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். ஜூன் 6க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.

கலைஞர்கள் சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ் அதிகரிக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். ஜூன் 10க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். மே 18,19 ஜூன் 14ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெறுவர். ஆனாலும் ஜூன் 6க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், கூடுதல் கவனம் தேவைப்படும்.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். மஞ்சள் எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து
வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.
நிலப்பிரனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகத்தீர்வு காண்பது நல்லது.  

பெண்கள் அக்கம் பக்கத்தினரின் தொல்லையில் இருந்து விடுபடு வர். மே 21க்கு பிறகு வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.

தோழிகள் உதவிகரமாக இருப்பர். மே15, ஜூன் 10,11ல் ஆடம்பர பொருள் வாங்க வாய்ப்புண்டு. மே 22,23ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள் சகோதரர் வகையில் பணஉதவி கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். மே 26,27,28ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

* நல்ல நாள்: மே 15,20, 21,22, 23,29,30,31,  ஜூன் 1,2,5,6,10,11
* கவன நாள்: மே 24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5,7
* நிறம்: மஞ்சள், கருப்பு,

* பரிகாரம்:
●  செவ்வாய்க்கிழமைஅன்று முருகன் வழிபாடு
●  தினமும் காலை நீராடியதும் சூரிய நமஸ்காரம்
●  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.