Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) காத்திருக்கு பதவி உயர்வு மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மதிப்பு
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மதிப்பு

பதிவு செய்த நாள்

15 மே
2018
06:05

பெருந்தன்மை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 3-ம் இடத்தில் நின்று குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். 11ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், கேது நற்பலன் தருவர்.

சுக்கிரன் ஜூன் 10ல் கடகத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் ஜூன் 6க்கு பிறகும் நற்பலனை கொடுப் பார். ராசிக்கு 10-ல் இருக்கும் சனி, 8-ல் உள்ள குரு 5-ல் உள்ள ராகு ஆகியோரால் சுமாரான பலன் உண்டாகும்.

சூரியனால் பொருளாதார வளம் சிறக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜூன் 10க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

பூர்வீகச் சொத்தின் மூலம் திடீர் வருமானம் கிடைக்கும். மனதில் பக்தி எண்ணம் மேலிடும்.

குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால்,  பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.

புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும். ஜூன் 7,8,9ல் பெண்களால் அனுகூலம் காணலாம்.  ஜூன் 3,4 ல்
உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே18,19 ஜூன் 14ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன மே 21க்கு பிறகு மறையும். ஜூன் 6க்கு பிறகு பொன்,பொருள் சேரும்.

கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். குறைந்த
முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். புதனால் பகைவர்கள் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் உள்ள அனுகூல மற்ற போக்கு முதலியன ஜூன் 6க்கு பிறகு மறையும்.
அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மே15, ஜூன் 5,6,10,11ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 22,23ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஜூன் 10க்கு பிறகு கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.

பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கலாம். மே 21க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் கூடுதல் கவனமுடன் இருக்கவும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புகளை வேறு
யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஜூன் 6 க்கு பிறகு சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின்
ஒத்துழைப்பு கிடைக்கும்.

விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மே 31, ஜூன் 9.12,13ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

கலைஞர்கள் உற்சாகமான பலனை காண்பர். விரும்பிய புகழ், பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மே 20,21ல் மனக்குழப்பம் ஏற்படலாம் கவனம்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். ஜூன் 6க்கு பிறகு மேற்படிப்பில்
விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.

பெண்கள் வாழ்வில் குதூகலம் உண்டாகும். மே 16,17, ஜூன் 12,13ல் நகைகள் மற்றும் ஆடம்பர பொருள் வாங்கலாம். மே 24,25 சிறப்பான நாட்களாக அமையும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும்.

விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 6க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

* நல்ல நாள்: மே 16,17, 22,23,24,25,31,  ஜூன் 1, 2,3,4,7,8,9,12,13
* கவன நாள்: மே 26,27,28 சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

* பரிகாரம்:
●  வெள்ளியன்று மாலையில் லட்சுமி வழிபாடு
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  சுவாதியன்று நரசிம்மருக்கு நெய் விளக்கு

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar