Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) மாதம் முழுவதும் நன்மை கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சிக்கான மாதம்
எழுத்தின் அளவு:
சிம்மம்:  (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சிக்கான மாதம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள சூரியன் நன்மை தருவர். புதன் 11-ம் இடமான மிதுனத்தில் இருந்து ஜூன் 24 வரை நன்மை தருவார். அதன் பின் அவர் கடகத்திற்கு வந்த பின் நன்மை தர மாட்டார். உங்கள் ராசிக்கு 12ல் இருக்கும் சுக்கிரன்  ஜூலை 5ல் உங்கள் ராசிக்கு மாறி நன்மை தருவார். எனவே இது வளர்ச்சிக்கான மாதமாக அமையும்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார் செவ்வாய், கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை யில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். ஜூலை 5க்கு பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  

குறிப்பாக ஜூன் 18,19,20 ஜூலை 16 ஆகிய நாட்களில் நன்மை காணலாம்.  ஜூன்25,26ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அதே நேரம் ஜூலை 12,13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.  ஜூன் 23,24 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க பெறலாம்.

அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.  சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவ முன்வருவர். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். ஜூலை 9,10,11 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். புதனால் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும்.

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். ஜூன் 24க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

தொழிலில் படிப்படியாக லாபம் அதிகரிக்கும்.  அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த தொல்லை  மறையும். புதிய தொழில் முயற்சி ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். ஜூலை5க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.  ஜூன் 16,17,21,22, ஜூலை 14,15ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். முயற்சிகளில் தடைகள் குறுக்கிடலாம்.  ஜூன் 30, ஜூலை 1ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம். ஜூலை 5க்கு பிறகு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சிறப்பான வாழ்வு அமையப் பெறுவர். பொதுநல சேவகர்கள் வளர்ச்சி காண்பர். ஜூன் 27,28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.   

விவசாயிகள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த  வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தினரால் மதிக்கப்படுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம். ஜூலை 2,3,4ல் அனுகூலபலன் உண்டாகும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வந்து சேரும்.  சனிபகவானால் வெளியூர் பயணம்  அடிக்கடி ஏற்படலாம். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். அவர்களுக்கு புதிய பதவியும் தேடி வரும்.

* நல்ல நாள்:  ஜூன் 18,19,20,23,24,30
* ஜூலை 1,2,3,4,9,10,11,12,13,16
* கவன நாள்: ஜூலை 5,6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்:பச்சை, சிவப்பு

* பரிகாரம்:
● சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
● ராகு காலத்தில் துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar