Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) மாதம் முழுவதும் நன்மை
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) மாதம் முழுவதும் நன்மை

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
05:06

பெற்றோர் மீது பாசம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

சிறப்பான மாதமாக இது அமையும். முக்கிய கிரகங்களில் 2 ல் உள்ள குரு, 11-ம் இடத்தில் இருக்கும் ராகு, சுக்கிரன்  தொடர்ந்து நன்மை தருவர். 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன், மாதம் முழுவதும் நன்மை தருவார். புதனும் ஜூன் 24ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரன் ஜூலை 5 வரை கடகத்தில் இருந்து நன்மை தருவார்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் ஏற்படும்.
பொன்,பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக  செயல்படுவர்.
சூரியன் சாதகமாக காணப்படுவதால் பொருளாதார வளம் சிறக்கும். எந்த செயலையும் வெற்றிகரமாக முடிக்கலாம்.  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே இணக்கம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும்.  ஜூன் 24 க்கு பிறகு குடும்பத்தில் பொருளாதாரம் பன்மடங்கு அதிகரிக்கும்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறைவின்றி நடந்தேறும்.  ஜூன் 21,22 ல் அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 16,17 ஜூலை14,15 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன் 27,28,29 ல் உறவினர்கள் வகையில் பிரச்னை வர வாய்ப்புண்டு. ஜூன் 25,26க்கு பிறகு புத்தாடை, அணிகலன்கள் சேரும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.

ஜூலை 12,13ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும்.


நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடி வந்து உதவுவர். ஜூன் 24 க்கு பிறகு வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதியதொழில் தொடங்கலாம். ஜூன் 18,19,20,23,24, ஜூலை 16ல் சந்திரனால் தடைகள் வரலாம்.  ஜூலை 5,6,7ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபடுவர். கலைஞர்கள்  முன்னேற்றமான பலனை காணலாம்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். ஜூலை 5 க்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பான
நிலையில் இருப்பர்.  

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர்.  கலை, விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி காண்பர். குரு பக்கபலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உங்களால் குடும்பம் சிறக்கும். ஜூலை 5,6,7 ஆகிய நாட்கள்  
சிறப்பானதாக அமையும்.  புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான நன்மை அடைவர். சுய தொழில் செய்யும் பெண்கள் அதிக ஆதாயம் கிடைக்கப் பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,21,22,25,26,
* ஜூலை 2,3,4,5,6,12,13,14,15
* கவன நாள்: ஜூலை7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட  எண்: 2,5,7 நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
● நவக்கிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை
● செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
● பிரதோஷத்தன்று சிவன்கோயிலில் தீபம்

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar