Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் சிவன் கோயில்
 
திருவள்ளூர் சிவன் கோயில் (89)
 
அருள்மிகு பரன்துறைஈஸ்வரர் திருக்கோயில்
தட்டமாஞ்சி, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு வடகிழக்கே 12 கி.மீ.
ஆரணியாற்றின் தென்கரைப் பகுதியில் இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருமூலீஸ்வரர் திருக்கோயில்
எலையம்பேடு, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு மேற்கே 2 கி.மீ.
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அபிராமவல்லி. 300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு நூற்றெட்டீஸ்வரர் திருக்கோயில்
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்
சென்னைக்கு வடக்கே 33 கி.மீ.
ஆரணியாற்றின் கரைப் பகுதியில் இக்கோயில் 842 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு சிவன் கோயிலாக நூற்றெட்டீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர். இக்கோயில் 500 வருட முற்பட்ட கோயில். மேலும் இவ்வூரில் மதக விநாயகர். கரிகிருஷ்ண பெருமாள் கோயிலும் உள்ளது. கும்மங்கலம் என்னுமிடத்தில் 2-21 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் அகத்தீஸ்வரர். அம்மன் ஆனந்தவல்லி இக்கோயில் இராஜ இராஜ சோழ மன்னனால் கட்டப் பெற்றதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சித்திரை மாத பௌர்ணமி அன்று 5 கோயில்கள் ஒன்று கூடி சந்திப்பு உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில்
காட்டூர், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர்க்கு வடக்கே 8 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருடமுற்பட்டது. மேலும் இவ்வூரில் வீற்றிருந்த பெருமாள், மகாலஷ்மி திருக்கோயில்கள் உள்ளன.
அருள்மிகு திருவெள்ளீஸ்வரர் திருக்கோயில்
திருவெள்ளவாயில், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர்க்கு வடக்கே 5 கி.மீ.
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சந்தான நாயகி. 300 வருட முற்பட்ட கோயில். தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன.
அருள்மிகு பிரசன்னஈஸ்வரர் திருக்கோயில்
கனியம்பாக்கம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
மீஞ்சூர்க்கு வடக்கே 4 கி.மீ.
இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
மீஞ்சூர்-601 203, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு தென்கிழக்கே 8 கி.மீ.
அம்மன் காமாட்சியம்மன். மேலும் இவ்வூரில் வரதராஜ பெருமாள், தாயார் பெருந்தேவி உள்ளனர். 500 வருட முற்பட்ட கோயில், இரண்டு கால பூஜை.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
சின்னம்பேடு, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு மேற்கே 10 கி.மீ.
சிறுவரம்பேடு. சிறுவாபுரி, இக்கோயில் 258/200 அடி நீளம் அகலம் கொண்டு ஒரு பிரகாரத்துடன், 5 நிலை இராஜகோபுரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் உண்ணாமுலையம்மன். இத்தலத்தில் உள்ள பாலசுப்ரமணியசுவாமியைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். ஸ்ரீ வள்ளி கல்யாண சுந்தரர் உற்சவ சிலை மிகவும் அழகானது. மயில் மரகதகல்லில் உள்ளது. ஸ்ரீ ராமபிரானின் புதல்வர்களான லவகுசன் இருவரும் கோதண்டராமனோடு (தன் தந்தை என்று அறியாமல்) போர் செய்து வெற்றி கொண்ட ஊர். ஆதலால் சிறுவர்புரி சிறுவாபுரி ஆகியுள்ளது. ஸ்ரீ ராமபிரானின் புனிதத் திருப்பாதங்கள் பட்டஇடமென்பது புராண வரலாற்றுச் செய்தியாகும்.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
ஆண்டார் குப்பம், பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு தெற்கே 5 கி.மீ.
இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் விசாலாட்சி இத்தலத்தில் உள்ள பாலசுப்ரமணிய ஸ்வாமியைப் போற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பஞ்சேஷ்டி, பொன்னேரி வட்டம் திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரிக்கு தெற்கே 8 கி.மீ.
இக்கோயில் உள்ள மூலவர் அத்திய முனிவர் ஸ்தாபிக்கப்பட்ட லிங்க மூர்த்தியாக அகத்தீஸ்வரர் உள்ளார். அம்மன் ஆனந்தவல்லியம்மன். பச்சைநிறம் கொண்டவள், பரிவார மூர்த்தங்கள் உள்ளன. கோயில் பிரகாரத்தில் பழமையான புற்று உள்ளது. கோயிலுக்கு கீழ்புறம் 300 ஏக்கர் பரப்பு கொண்ட அகத்திய தீர்த்தக்குளம் உள்ளது. 5 நிலை இராஜகோபுரமும், ஒரு பிரகாரமும் கொண்டது. இக்கோயில் 1000 வருட முற்பட்ட கோயிலாகும். சந்திரகிரி அரச பரம்பரையில் இக்கோயில் கட்டுவித்தாக கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன.
<< Previous  2  3  4  5  6  7  8  9  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar