|    | 
								 | அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் |  
  |  
  | 
|  
                                | 
   
                                                                                 | 
                                                                                                               |   | 
| 
 
                                                                                
                                                                                
                                                 | 
|   | 
|  
                                  |  
  | 
           | 
                                 
                                     மூலவர் | : | 
                                 நாராயணன் |  
                 |  
               | 
                                 உற்சவர் | : | 
                                 வரதராஜ பெருமாள் |  
                                                                                                   |  
           | 
                                 
                                     அம்மன்/தாயார் | : | 
                                 
                                   லட்சுமி |  
                                                                       							
                                          
                                    
                                                       
                                     |  
           | 
      ஊர் | : | 
                                     இடையாற்றுமங்கலம் |  
                                                                            
                                     |  
           | 
      
                                            மாவட்டம் | : | 
                                      
                                     திருச்சி
                                      |  
                                                                           
                                     |  
           | 
      மாநிலம் | : | 
                                     
                                       தமிழ்நாடு |  
                                                                           
           |  |  
                                      |  
  | 
           
                         
            
              | 
            
                 திருவிழா: | 
              | 
                         
            
            |   | 
             
                 | 
              | 
                         
            
            |   | 
            
                       வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை. | 
              | 
                         
            
            |   | 
             
                 | 
              | 
                         
               
                       
            
              | 
            
                 தல சிறப்பு: | 
              | 
                         
            
            |   | 
             
                 | 
              | 
                         
            
            |   | 
            பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு. | 
              | 
                         
            
            |   | 
             
                 | 
              | 
                         
               
            | 
          திறக்கும் நேரம்: |   |    | 
          |  
   |   |   |  |   | காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை  5 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். |   |  |   |   |   |  
    
    | 
  முகவரி: |   |  |   |   |   |  |   | 
                        அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்
இடையாற்றுமங்கலம், லால்குடி, 
திருச்சி மாவட்டம். | 
                          |  
                        |   |   |   |  
                          
                                                                         |  
   |   |   |    | 
   பொது தகவல்: |   |  
  
         |   | 
           | 
           | 
           
          
          |   | 
                        கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதையடுத்து மகாமண்டபம். மகாமண்டபத்தின் நடுவே கருடாழ்வார் பெருமாளைப் பார்த்தபடி நின்ற கோலத்தில் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலதுபுறம் ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலை துவாரபாலகர்களின் சுதைவடிவத் திருமேனி அலங்கரிக்க, அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது. வரதராஜப் பெருமாள் என்று திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார், உற்சவர். அலங்காரப் பிரியரான பெருமாளுக்கு இங்கு நடக்கும் அலங்கார ஆராதனைகள் அற்புதமானவை. அடுத்துள்ள கருவறையில் பெருமாள், லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார். | 
            | 
            
          |   | 
  			  | 
            | 
    
              
                                            
  | 
 	
    |   | 
         
            | 
                                             
                                             
            | 
    
 தல வரலாறு: |   |  
  |   | 
    | 
    | 
 
  |   | 
            கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது. | 
    | 
 
         |   | 
           | 
		  | 
          
          
                                              | 
                                             
                                                                                
                                            
                                                                                
                                                                                
                                                                                  | 
                                                                                சிறப்பம்சம்: |   |  
  |   | 
    | 
    | 
 
  |   | 
      
        		அதிசயத்தின் அடிப்படையில்:
             பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.
            
             
             
                                     
   | 
    | 
 
  |   | 
    | 
    | 
 
   | 
 
  |   | 
    | 
    | 
 
                                                                                
                                                                                  |  
     |   |  
     
     | 
     
     
    
        
     | 
     
      
                                                                                  |