Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு நாகவர்ண பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நாகவர்ண பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நாகவர்ண பெருமாள்
  அம்மன்/தாயார்: ராதா, ருக்மணி
  ஊர்: திண்டிவனம் நகர்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிப்பூர விழா, வைகுண்ட ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  கையில் ராமாயண காவியத்தைப் படித்தபடி தரிசனம் தரும் அனுமன் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நாகவர்ண பெருமாள் திருக்கோயில், நகர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  யோக நிலையில் காட்சி தரும் நரசிம்மர், கையில் ராமாயண காவியத்தைப் படித்தபடி தரிசனம் தரும் அனுமன், அழகு கொஞ்சும் திருமுகத்துடன் ஆண்டாள், கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  விவசாயம் செழிக்க, நீர் நிலைகளில் தண்ணீர் நிறைய இங்குள்ள பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள பெருமாளுக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  முதலாம் குலோத்துங்க சோழனுடைய மனைவியின் பெயர் மதுராந்தகி. இவருக்கு அவனி முழுதும் உடையாள், புவனம் முழுவதும் உடையாள், தீனசிந்தாமணி ஆகிய பெயர்களும் உண்டு என்கின்றன கல்வெட்டுக்கள்! எனவே, இந்த ஊரையும், கோயிலையும் முதலாம் குலோத்துங்கன் உருவாக்கியிருக்கலாம் என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது, ராதா ருக்மிணி சமேத நாகவர்ணபெருமாள் கோயில். நாடுடைய பெருமாள், வாளால் வழி வகுத்த பெருமாள் எனப் பெருமாளின் திருநாமங்களைத் தெரிவிக்கிற கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் விஜயராஜேந்திர வளநாடு, நாடுடைய பெருமாள் நல்லூர் என்றும் இந்த ஊருக்குப் பெயர்கள் இருந்தன. தீனசிந்தாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டு, தற்போது நகர் என்று அழைக்கப்படும் கிராமத்தில், ஸ்ரீ நாகவர்ணபெருமாள் ஒரு காலத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா வந்திருக்கிறார்; விழாக்கள் விமரிசையாக நடந்தேறியுள்ளன, ஆடிப்பூர விழாவும் வைகுண்ட ஏகாதசியும் பிரமாண்டமாக நடந்துள்ளன. மேலும், புரட்டாசி மாதத்தில், பெருமாளைத் தரிசிக்க, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் மாட்டு வண்டிகளைப் பூட்டிக் கொண்டு ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர். இந்தப் பெருமாள்தான் நம் தேசத்தைச் செழிக்கச் செய்கிறார் என்று நல்லியக்கோடன் இங்கு வந்து மனமுருகி வழிபட்டுச் சென்றிருக்கிறான்.  
     
  தல வரலாறு:
     
 

ஒய்மா தேசத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான் நல்லியக்கோடன் என்ற மன்னன். அவனை ஊரே புகழ்ந்தது; அவனது நல்லாட்சியைக் கண்டு ஊரே மன்னனைக் கொண்டாடியது. மக்களும் பசுக்களும் நலமுடன் வாழவேண்டும் என்று இடையறாது சிந்தித்துச் செயல்பட்டான். ஆறு-குளங்களை வெட்டினான்; கல்வி மற்றும் மருத்துவச் சாலைகளை நிறுவினான். புலவர்களை அழைத்துப் பொன்னையும் பொருளையும் வழங்கினான். சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், பாட்டுடைத் தலைவனாகப் புகழப்பட்டிருக்கிறான் நல்லியக்கோடன். ஊரும் உலகமும் மன்னனையும் மன்னனைப் போற்றி எழுதப்பட்ட நூலினையும் தலையில் வைத்துக் கொண்டாடியது!


திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கிடங்கில் எனும் பகுதியைத் தலைமை இடமாகக்கொண்ட நல்லியக்கோடனை மக்கள், அரசனாகப் பார்க்காமல் ஆண்டவனாகவே பார்த்தனர். ஆனால், அவனோ, இந்தத் தேசம் செழிப்பதற்கு இறைவனே காரணம் என்பதில் உறுதியாக இருந்ததால், கடவுளின்மீது மாறாத பக்திகொண்டிருந்தான். ஒய்மா தேசத்துக்கு உட்பட்ட இடைக்கழிநாடு, எயிற்பட்டினம், ஆமூர் மூதூர் வேலூர்,மாவிலங்கை ஆகிய பகுதிகள் நகரங்களாக வளர்ந்தன. இவற்றில், தீனசிந்தாமணி நல்லூரும் ஒன்று.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கையில் ராமாயண காவியத்தைப் படித்தபடி தரிசனம் தரும் அனுமன் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.