Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலட்சுமி
  ஊர்: கோலாப்பூர்
  மாவட்டம்: கோலாப்பூர்
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 தேதிகளில் கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் மகாலட்சுமியின் பாதத்தில் விழுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் மார்பு பகுதியில் விழுகிறது. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் உடல் பகுதி முழுவதும் விழுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் அம்மனின் மீது விழும்போது அம்மனை தரிசிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் கோலாப்பூர் (கரவீரபீடம்), மகாராஷ்டிரா.  
   
    
 பொது தகவல்:
     
  காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அன்னையின் கோயிலைச் சுற்றி 50 சிறு கோயில்களும் ஊர் முழுவதிலும் 3000 கோயில்களும் உள்ளன. சக்தி பீடங்களுள் ஒன்றான இக்கோயில் மராட்டிய பாணியில் கட்டப்பட்டது. தேவி, கோலாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.  
     
  தல வரலாறு:
     
  பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 தேதிகளில் கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் மகாலட்சுமியின் பாதத்தில் விழுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் மார்பு பகுதியில் விழுகிறது. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமியின் உடல் பகுதி முழுவதும் விழுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் அம்மனின் மீது விழும்போது அம்மனை தரிசிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar