Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராஜராஜேஸ்வரி
  ஊர்: பொலாலி
  மாவட்டம்: தட்ஷின கன்னடா
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  சஷ்டி, சுப்ரமண்யருக்கு ரதோற்ஸவம், நவராத்திரி விழா உற்ஸவம்.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக மூலஸ்தானத்தில் அந்த தலத்திற்குரிய மூலவர் மட்டுமே அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள மூலவர் கருவறையில் மகாகணபதி, சரஸ்வதி, பத்ரகாளி, சுப்ரமணியர் ஆகியோர் களிமண் விக்கிரகத் திருமேனியராகக் காட்சி தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி மதியம் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில் பொலாலி, கரியங்கலா, பண்ட்வால், தட்சின கன்னடா மாவட்டம் கர்நாடகா மாநிலம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்குள்ள மூலவர் மற்றும் ஏனைய மூர்த்தங்களுக்கு, 12 வருடங்களுக்கு ஒருமுறை, எட்டு வகை மூலிகைக் கலவைகளால் மேல்பூச்சு பூசப்படுகிறது. இந்தக் கோயிலின் சிறப்புகளில், கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடைபெறும் திருவிழாவும் ஒன்று. மார்ச் மாதத்தின் நடுவில், கொடியேற்றத்துடன் துவங்கி, 30 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது இந்தவிழா. அப்போது, 5 நாட்கள் நடைபெறும்...  பொலாலி செண்டு எனப்படும் பக்தர்கள் ஆடும் கால்பந்தாட்டத்தைக் காண, லட்சக் கணக்கான மக்கள் திரள்வார்கள். இந்த விளையாட்டை அறிந்து வியந்த திப்புசுல்தான், ஒவ்வொரு முறையும் வந்து இதைக் கண்டு களித்ததோடு, ஏராளமான நகைகளை இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கினான் என விவரிக்கிறது ஸ்தல வரலாறு. திப்பு சுல்தான் அமர்வதற்காகக் கட்டப்பட்ட மிகப் பெரிய மேடையை இன்றைக்கும் காணலாம்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கேயுள்ள சிவனார், சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கேயுள்ள பத்ரகாளிக்கு உரிய காயத்ரி பூஜை செய்து வழிபட்டால், வாழ்வில் சர்வ மங்கலமும் உண்டாகும்; மூலவர் ராஜராஜேஸ்வரிக்கு பூஜை செய்தால், நினைத்தது நடக்கும்; வாழ்வில் இழந்ததைப் பெற அம்பிகை துணை புரிவாள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் மற்றும் மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கங்கைக் கரையில் காசி, கங்கை; யமுனை நதிக்கரையில் பிரயாகை; கொல்கத்தாவின் ஹுக்ளி கரையில் காளி; சரயு நதி-அயோத்தி; துங்கா-சிருங்கேரி; சவுபர்ணிகா- கொல்லூரு; நேத்ரவதி-தர்மஸ்தலா என நதிக்கரைகளில் திருத்தலங்கள் அமைந்துள்ள நம் தேசத்தில், பல்குணி நதிக்கரையில் உள்ளது பொலாலி சேத்திரம். இங்கே, அருளும் பொருளும் தந்து உய்விக்கிறாள், ராஜராஜேஸ்வரி ! மூலவர் ராஜராஜேஸ்வரி, சுமார் 9 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலம்; கருவறையில் மகாகணபதி, சரஸ்வதி, பத்ரகாளி, சுப்ரமணியர் ஆகியோர் களிமண் விக்கிரகத் திருமேனியராகக் காட்சி தருகின்றனர். ராஜராஜேஸ்வரியின் திருப்பாதங்களுக்கு இடையே மயில் விக்கிரகத்தையும், பத்ர காளியின் திருப்பாதத்துக்கு அருகில் பெண் நரியையும் காண முடிகிறது. பத்ரகாளிக்கு உகந்த பிராணி நரி!

இங்கே, மூலவர் ராஜராஜேஸ்வரி. ஆனாலும், அர்ச்சகர் தன் தலையில் சுமந்து வந்து, கோயிலை வலம் வரச் செய்வது சுப்ரமணியரைத்தான்! துர்கையின் திருவிக்கிரகம் கிரானைட்டாலும், கோயிலுக்குப் பாதுகாவலரான சேத்திரபாலகரின் திருமேனி, மரத்தாலும் செய்யப்பட்டது. மூலவருக்கு அருகில், உலோகத்தால் செய்யப்பட்ட கணபதி, சிவன், ராஜராஜேஸ்வரி, பத்ரகாளி மற்றும் சுப்ரமணியர் ஆகியோருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீர்த்தம் வழங்கப்படுகிறது. ராஜராஜேஸ்வரியை வணங்கி வழிபட்டால், இழந்த செல்வத்தையும் பதவியையும் பெறலாம். எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்!
 
     
  தல வரலாறு:
     
  அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுகள் மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களின் குறிப்புகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மையான ஆலயம் இது. இப்படியான ஆலயத்தையும், இங்கேயுள்ள அழகு மிகுந்த மூர்த்தங்களையும் உலகில் வேறெங்கும் கண்டதில்லை என, 1442-ஆம் வருடம் இந்தியாவுக்கு வருகை தந்த யாத்ரீகர் அப்துல் ரஸாக் ஹிஸ்ரா, குறிப்பு எழுதியுள்ளார். இந்த ஆலயத்தைக் கட்டிய மன்னன் சுராதா, பொன் மற்றும் வைரத்தாலான மணிமுடியை மூலவிக்கிரகத்தில் அணிவித்து, அழகுபார்த்தான் என்கிறது ஸ்தல வரலாறு. கெலாடியை ஆட்சி செய்த மன்னனின் பட்டமகிஷி, தன்னுடைய செலவில் அழகிய தேர் ஒன்றை வழங்கினாளாம். மன்னர் சுராதா பின்னாளில் அரச பதவியை இழந்து காட்டில் வாழ்ந்தார். அப்போது அங்கிருந்த துறவி ஒருவருக்குச் சேவைகள் செய்துவந்தார். பிறகு, வணிகர் ஒருவருடன் சேர்ந்து, ராஜராஜேஸ்வரியை மூலிகை மருந்துகளால் உருவாக்கி, ஆலயம் எழுப்பி, அம்பிகையை வழிபட்டார். அதன் பயனாக, எதிரிகளை வென்று, தன் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக மூலஸ்தானத்தில் அந்த தலத்திற்குரிய மூலவர் மட்டுமே அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள மூலவர் கருவறையில் மகாகணபதி, சரஸ்வதி, பத்ரகாளி, சுப்ரமணியர் ஆகியோர் களிமண் விக்கிரகத் திருமேனியராகக் காட்சி தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.