Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காவேரிஅம்மன்
  ஊர்: திருச்சி
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா, ஆடிமாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. அம்மன் கோயிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது. இக்கோயிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை மணி 6 முதல் மணி 11 வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கு, திருச்சி.  
   
    
 பொது தகவல்:
     
  கோயிலின் உள்ளே கருவறையில் நந்தியும், அம்மனின் இடப்புறம் நாகர், வலப்புறம் விநாயகரும் எழுந்தருளி உள்ளார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள அம்மனை வேண்டிச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்கு எழுந்தருளியிருக்கும் காவேரி அம்மனின் தனிச்சிறப்பு நீர் வளம் தான். இப்பகுதியில் கோடைக்காலத்தில் நீர் வளம் குறைந்துவிட்டால் இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்து வேண்டிட, நல்ல மழை பெய்து வீட்டின் கிணற்றில் நீர்வளம் நிறைந்து காணப்படும் என்கிறார்கள். மேலும், ஆழ்குழாய்க் கிணறு, குளம் வெட்டுவதற்கு முன் காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டுமோ, அந்த இடத்தில் தெளித்து, பூஜை செய்து கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு அமைத்தால் நீர்வளம் நிறைந்து காணப்படுகிறது என்று அப்பகுதியில் வாழும் பெரியவர்கள் கூறுகிறார்கள். அதனால் இன்றும் விவரம் அறிந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வீட்டிற்கும், வயல் பகுதியிலும் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டு நல்ல பலன் பெறுகிறார்கள். காவேரிக் கரையோரங்களில் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகச் சிறப்பாக இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் காலை ஏழு மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் இரண்டு கால பூஜைகள் நிகழ்கின்றன.  
     
  தல வரலாறு:
     
  சுமார் பலநூறு வருடங்களுக்கு முன் காவேரி நதியானது பரந்து, விரிந்து தன் விருப்பப்படி ஓடியதாக வரலாறு சொல்கிறது. மழைக் காலத்தில் ஊருக்குள் காவேரி பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்டு. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாய்க்கால் வெட்டி சீர் செய்த பெருமையை சோழன் கரிகாலன் பெற்றான். அந்தக் காலகட்டத்தில் காவேரி நதியில் வெள்ளம் வந்த போது ஓர் அம்மன் சிலை கரை ஒதுங்கியதாம். அந்த அம்மன் சிலையை எடுத்து கரையோரமாக வைத்து வழிபட்டு வந்தார்கள் அந்தப் பகுதி மக்கள். அந்தச் சிலை தெய்வாம்சமாக இருந்ததாலும், காவேரி நதியில் வெள்ளம் வந்த போது கரை ஒதுங்கியதாலும் அந்த அம்மன் சிலைக்கு காவேரி அம்மன் என்று பெயர் சூட்டி ஒரு சிறிய கோயிலையும் கட்டினார்கள் என்று புராண தகவல் கூறுகின்றது. கால ஓட்டத்தில் காவேரி நதிக்கு என்று வாய்க்காலை கரிகாலன் வெட்டியதால் காவேரிக் கரையோரம் வயல்வெளிகளுடன் நகர்புறங்கள் தோன்ற ஆரம்பித்தன. மேலும், அந்தப் பகுதிகளும் செழிப்புற்று திகழ்ந்தன. இன்று பரபரப்பான சூழ்நிலையில், பல கட்டடங்கள் எழுந்துள்ள நிலையில் திருச்சியில் கோயில் கொண்டுள்ள காவேரி அம்மன்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. அம்மன் கோயிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது. இக்கோயிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar