Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வராகமூர்த்தி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வராகமூர்த்தி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வராகமூர்த்தி
  தீர்த்தம்: வராக தீர்த்தம்
  ஊர்: ஸ்ரீவராகம்
  மாவட்டம்: திருவனந்தபுரம்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  பங்குனி மாதம் எட்டு நாட்கள் பிரம்மோற்ஸவம், வராகஜெயந்தியன்று லட்சார்ச்சனை.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தை பெருமாளே கட்டினார் என்று வராகபுராணம் தெரிவிப்பதும், கேரளத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதும் இக்கோயிலின் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வராகமூர்த்தி திருக்கோயில் ஸ்ரீவராகம், திருவனந்தபுரம் கேரளா.  
   
போன்:
   
  +91 471- 245 2450 
    
 பொது தகவல்:
     
   கேரள கட்டடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட இந்த கோயிலில் கோயிலில் நுழைய கிழக்கு, வடக்கு வாசல்கள் உள்ளன. வெளிப்பிரகாரம் சதுரமாகவும், கருவறை வட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் கூரை செம்பு ஷீட்டுகளால் மூடப்பட்டுள்ளது. உச்சியில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் மரச் சட்டங்கள் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் இதில் தீபம் ஏற்றுகிறார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  நாகதோஷம் விலக, வேலைவாய்ப்பு கிடைக்க, கல்வியில் மேம்பட இங்கு வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சந்தனக்காப்பு சாற்றியும். லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம், சந்தனாபிஷேகம், கலச திரு மஞ்சனம், துலாபாரம், கருடவாகன சேவைகள் செய்தும் வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

ஸ்ரீவராகம் கோயிலை பெருமாளே கட்டினார் என்று வராகபுராணம் தெரிவிப்பதால், இது மிகவும் பழமையான கோயிலாகும். தென்னந்தோப்புகளுக்கு இடையே ரம்யமான சூழ்நிலையில் உள்ளது. கேரளத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் என்ற பெருமையை இக்கோயிலிலுள்ள வராக தீர்த்தம் பெற்றுள்ளது. (முதல் பெரிய தெப்பக்குளம் ஆலப்புழை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில்)


லட்சார்ச்சனை வழிபாடு: வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பெருமாளிடம் வேண்டி பலனடைபவர்கள் சந்தனக்காப்பு சாத்துகின்றனர். லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம், சந்தனாபிஷேகம், கலச திரு மஞ்சனம், துலாபாரம், கருடவாகன சேவைகளும் செய்கின்றனர். பால்பாயாசம், அரவணை, மோதகம், பஞ்சாமிர்தம், பானகம் ஆகியவை நிவேதனம் செய்கின்றனர். சிலர் வராஹ மூர்த்தியை குருவாகக் கொண்டுள்ளனர். கல்வியில் மேம்படுவதற்காக வியாழக்கிழமைகளில் இவருக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர்.


சுற்றம்பலம்: வெளிப்பிரகாரத்தை சுற்றம்பலம் என்கின்றனர். விநாயகர், சிவலிங்கம், ஐயப்பன், நாகராஜா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தங்கக் கொடிமரம் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.


சீவேலி வழிபாடு: மேற்கு நோக்கிய கருவறையில், ஸ்ரீ வராகமூர்த்தி பத்ர பீடத்தில் அருள்பாலிக்கிறார். இவரது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தரித்திருக்கிறார். இடது திருக்கரம் லட்சுமியை அணைத்தபடியும், வலது திருக்கரம் வரத ஹஸ்தமாகவும் அமைந்து, பக்தர்களுக்கு அருள் வழங்குகிறது. உற்சவ விக்ரஹம் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விக்ரஹத்தை காலை, மதியம் மற்றும் இரவில் தலையில் வைத்து பிரகாரத்தில் வலம் வருகின்றனர். இதற்கு சீவேலி என்று பெயர். சீவேலி வழிபாட்டுக்காக பக்தர்கள் பிரகாரத்தில் நிறைந்து நிற்பார்கள். இதுவே இங்கு விசேஷ வழிபாடு. வெள்ளிக் கவசம் சாத்திய அனுமனின் விக்ரஹம் இங்குள்ளது. கருவறை வாசலில் துவாரபாலகர் உள்ளனர்.


 
     
  தல வரலாறு:
     
  அரக்கர்களை அழித்து சாதுக்களை காக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் திருமால் பல அவதாரங்கள் எடுத்தார். ஒருசமயம், உலகம் அழிந்தது. மீண்டும் உலகத்தைச் சிருஷ்டிக்க, பிரம்மாவின் அங்கீகாரம் பெற்ற, அவரது மகன் ஸ்வயம்பு (சுயம்பு) படைப்பு தொழிலில் ஈடுபட்டார். ஆனால், பூமிப்பந்து கடலில் மூழ்கிக்கிடந்ததால், உயிர்கள் வாழ இயலாத நிலை ஏற்பட்டது. பூமியை வெளிக்கொண்டு வர பிரம்மாவிடம் வேண்டினார். பிரம்மாவுக்கு பூமியை மீட்கும் பலம் இல்லாததால், மகாவிஷ்ணுவை சரணடைந்தார். விஷ்ணு, வராக (பன்றி முகம்) உருக்கொண்டு அவதரித்து, கடலில் முழ்கியிருந்த பூமிப்பந்தை தனது தெற்றுப் பற்கள் மீது தூக்கி வந்தார். வழியில் அவரிடம் சண்டைக்கு வந்த இரண்யாட்சன் என்ற அசுரனை, கடலில் மூழ்கடித்து கொன்றார். (இவன் பூமித்தாயாருக்கு பல கொடுமைகளைச் செய்தவன்) பிறகு பூமியை நன்றாக நிலைபெறச் செய்தார். இரண்யாட்சனுடன் செய்த போர் காரணமாக, பெருமாளுக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க லட்சுமி வந்தாள். கணவரின் மடியில் அமர்ந்தாள். லட்சுமியைக் கண்டதும் பெருமாள் மனம் குளிர்ந்தார். இந்தப்பெருமானே லட்சுமி வராகர் என்ற திருப்பெயருடன், திருவனந்தபுரத்தில் ஸ்ரீவராகம் என்ற இடத்தில் ஸ்ரீவராக மூர்த்தி கோயில் கொண்டுள்ளார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தை பெருமாளே கட்டினார் என்று வராகபுராணம் தெரிவிப்பதும், கேரளத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதும் இக்கோயிலின் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar