Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணியர்
  தீர்த்தம்: முருக தீர்த்தம்
  ஊர்: மருங்கூர்
  மாவட்டம்: கன்னியாகுமரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை, சூரசம்ஹாரம்.  
     
 தல சிறப்பு:
     
  மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4652- 241 421. 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

மும்மூர்த்தி அம்ச முருகன்: மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.


கந்தசஷ்டிக்கு மும்மூர்த்தி அலங்காரம்: ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி)நடராஜராகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மாவாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவார்.


மக்களைக் காணும் மகேசன்: விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.


சோறூட்டும் வைபவம்: பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இவ்வூர் மருங்கூர் என பெயர் பெற்றது. இத்தலத்திற்கு வாசிபுரம் என்றும் பெயருண்டு. வாசி என்றால் குதிரை. பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன. கோயில் எதிரில் முருக தீர்த்தம் உள்ளது. உற்சவர் சண்முகர், கந்தசஷ்டி விழாவின்போது மட்டுமே புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவரை சன்னதிக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.


 
     
  தல வரலாறு:
     
  அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான உச்சைசிரவஸு என்னும் குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவன் இத்தலத்தைச் சுட்டிக்காட்டி முருகனை வழிபட விமோசனம் கிடைக்குமென்றார். அதன்படி இங்கு வந்த உச்சைசிரவஸு, இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். பிற்காலத்தில் இங்கு சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருவார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.