Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு போரன் தேவ் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு போரன் தேவ் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: போரன் தேவ்
  தீர்த்தம்: பாரஸ் ஏரி
  ஊர்: ஜபல்பூர்
  மாவட்டம்: கவர்தா
  மாநிலம்: சட்டீஸ்கர்
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரியின் போதும் சுக்ல பஞ்சமியன்றும் இங்கு பெரிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  விநாயகர் நாட்டிய சிவலிங்கத்தைக் கையில் ஏந்தியிருப்பது ஓர் அற்புதமான காட்சி! அவர் காலடியில் அரக்கன் ஒருவன் மிதிப்பட்டுக் கிடக்கிறான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5மணி முதல்12 மணி வரை, மாலை4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு போரன் தேவ் திருக்கோயில் கவர்தா, ஜபல்பூர், சத்தீஸ்கர்.  
   
    
 பொது தகவல்:
     
  ஆலயத்திற்கு கிழக்கு, தெற்கு, வடக்கு என மூன்று வாயில்கள். கிழக்கு முகம் பார்த்த கோயில். மண்டபப் பகுதியில் விஷ்ணு, லட்சுமி, கனேஷ், பிரம்மா, கோபால் தேவ் ஆகிய தெய்வங்களின் மூர்த்தங்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்ப்பக்கிருகம் இறங்கி கீழ்ப்புறம் செல்ல வேண்டியிருக்கிறது. கர்ப்பக் கிருகத்தில் லிங்க வடிவினராக போரன்தேவ் காட்சி தருகிறார்.  கர்ப்பக் கிருகத்தில் போரன்தேவுடன், அம்பிகா தேவி விநாயகர் மூர்த்திகளும் நிறுவப்பட்டுள்ளன. அருகே பஞ்சமுக நாகதேவர் மூர்த்தமும் உள்ளது. மழைக்காலங்களில் இன்றும் இங்கு சர்ப்பம் காட்சி தருகிறது. போரன்தேவ் நாகதேவனின் புத்திரனாகவும் கருதப்படுகிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்க, நினைத்தது நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சத்தீஸ்கர் மாநிலத்தின் கஸுராஹோ என அழைக்கப்படுகிறது, புராதன பெருமைமிக்க போரன்தேவ் ஆலயம். விந்திய சாத்புரா மலைத் தொடரின் ஒரு சரிவில் அமைத்துள்ள இந்த ஆலயம் சித்தர்பீடம் என்றும் சொல்லப்படுகிறது. பழங்குடியினர் ஆராதித்து வந்த போரன் தேவ் கோயிலில் கலை நேர்த்தியுடன் எழிலான சிற்பங்கள் அமைந்துள்ளன. பதினோராம் நூற்றாண்டின் நாகர் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ராமச்சந்திரா என்பவர் இதை நிறுவியதாக வரலாற்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களின் வடிவமைப்பை நோக்கும்போது விஸ்வகர்மாவே நேரில் வந்து நிர்மாணித்திருப்பாரோ! எனத் தோன்றுகிறது. ஆலயம் அமைந்த குன்று தியாபார் பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. அதன் உச்சியில் ஒரு காலத்தில் தீபம் எரிந்து கொண்டிருந்ததாம். இப்போதும் இக்குன்றின் உச்சியில் பிரகாசமான ஒளி தோன்றிக் கொண்டேயிருக்கிறது. பக்தர்களின் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்ய வல்லவர் போரன் தேவ் என்பது நம்பிக்கை!

ஒரு காலத்தில் இந்த சிவலிங்கம் உருண்டை வடிவத்தில் இருந்ததாம். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் அங்கு வந்து மடிப்பிச்சை கேட்பது போல் தங்கள் புடைவைத் தலைப்பை விரித்துப்பிடித்தபடி தங்கள் குறைகளைத் தெரிவிப்பது வழக்கமாக இருந்ததாம். அந்த சமயத்தில் புடைவைத் தலைப்பில் உருண்டையான சிவலிங்கம் தானாகவே வந்து விழுந்து ஆசி கூறுவது மெய்சிலிர்க்க  வைக்கும் சம்பவமாக இருக்குமாம். அத்தகைய ஆசி பெற்றவர்கள் புத்திர பாக்கியத்தைப் பெறுவது உறுதி. மலைகள், ஏரிகள், நதிகள், குகைகள் என இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. கோயிலுக்கு அருகில் உள்ள ஏரி பாரஸ் ஏரி என்று அழைக்கப்படுகிறது. ஏரி உயரமாக அமைந்துள்ளபோதும் எக்காலத்திலும் வற்றுவதில்லை.

புராண காலத்தில், ஆலயத்தை தரிசிக்கும் முன் ஒரு பக்தை நீராட இந்த ஏரியில் இறங்கினாளாம் நீராடி முடித்து வந்தபோது, அவள் காலில் அணிந்திருந்த இரும்பாலான மெட்டி, ஈசனின் அருளால் தங்கமாக மாறி ஒளி வீசிக்கொண்டிருந்ததாம், திகைப்பும் வியப்பும் அடைந்த பெண்மணி நடந்தவற்றை அங்கிருந்த பக்தர்களிடையே விவரித்தாள். அந்தச் செய்தி அரசனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே இரும்புச் சங்கிலிகளை யானைகளோடு பிணைந்து அதை ஏரிக்குள் இறக்குகிறான் யானை வெளியே வரும்போது இரும்புச் சங்கிலி தங்கச் சங்கிலிகளாக மாறியிருந்தனவாம்.

சக்தி வழிபாட்டையும் இந்த ஆலயம் முக்கியப்படுத்துகிறது. ஆலயத்தின் பிராகரத்தில் கிழக்குப் பகுதியில் மரத்தின் கீழ் சக்தி தேவி குடி கொண்டிருக்கிறாள். பக்தர்கள் பிரார்த்தனையுடன் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை முடிக்கிறார்கள் அதேபோல் சாமுண்டா தேவிக்கென சிறு ஆலயமும் பிராகரத்தின் மேற்குப்புறம் எழுப்பப்பட்டுள்ளது. போரன் தேவியின் இஷ்ட தேவதை சாமுண்டா தேவி. ஆலயப் பிராகாரத்தின் தென்புறம் வில்வமரத்தின் கீழ் அனுமன், விநாயகர் மூர்த்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  ஒரு முறை குழந்தைப் பேறு அடையாத பெண் ஒருத்தி அந்த கர்ப்பக் கிருகத்தில் வந்து வழிபாட்டை நடத்தியிருக்கிறார்கள். அப்போது சிவலிங்கம் அசையாமல் நின்றதாம். வேதனையை அடக்க முடியாத அந்தப் பெண்மணி தானாகவே அந்த சிவலிங்கத்தை எடுத்து தன் முந்தானையில் வைத்திருக்கிறாள். அப்போது அந்த சிவலிங்கம் இரண்டாக வெடித்துப் பிரிந்து விட்டதாம். வெடித்துப் பிரிந்து பகுதிகள் நீண்ட நாட்கள் கோயில் உட்புறமே கிடந்து பின்னர் மறைந்து விட்டதாம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: விநாயகர் நாட்டிய சிவலிங்கத்தைக் கையில் ஏந்தியிருப்பது ஓர் அற்புதமான காட்சி!. அவர் காலடியில் அரக்கன் ஒருவன் மிதிப்பட்டுக் கிடக்கிறான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar