Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு பாலா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலா
  ஊர்: நெமிலி
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, பங்குனி திருவிழா  
     
 தல சிறப்பு:
     
  குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலா திருக்கோயில் நெமிலி, அரக்கோணம், வேலூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4177- 247216, 99941 18044.  
    
 பொது தகவல்:
     
  உலகாளும் நாயகியான லலிதாம்பிகையின் செல்வத்திருமகளே ஸ்ரீபாலா.  
     
 
பிரார்த்தனை
    
  கல்வியில் சிறந்து விளங்க, ஞாபக சக்தி வளர இங்குள்ள பாலாவை வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு பக்தர்களுக்கு சாக்லேட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
 

புராணத்தில் பாலா: லலிதாம்பிகையிடம் இருந்து அவதரித்தவள் பாலா. தாயைப்போல சிவந்தவளான  இவளுக்குரிய மந்திரம் ஸ்ரீவித்யா. முருகப்பெருமான் தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தது போல, தந்தையின் சம்பந்தம் இல்லாமல் தாயிடம் இருந்து பிறந்தவள் பாலா. ஸதா நவவர்ஷா என்ற பெயரும் இவளுக்கு உண்டு. எப்போதும் புதுமையாக (யாரும் எதிர்பாராத விதமாக அருளைப் பொழிபவள் என்பது இதற்குப் பொருள். அதனால் தானோ என்னவோ, இந்தக் கோயிலில் தற்கால நாகரீகத்திற்கேற்ப சாக்லெட் பிரசாதம் தருகிறார்கள். ஜபமாலையும், புத்தகமும் வைத்திருக்கிறாள்.

ஆற்றில் வந்தவள்: நெமிலியில் வசித்த வேதவித்தகர் சுப்பிரமண்ய அய்யர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனவில் பாலா தோன்றினாள். அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளையை ஏற்று ஆற்றில் வருகிறேன். என்னை அழைத்து உன் வீட்டில் அமர்த்திக்கொள், என்றாள். அய்யர் ஆற்றுக்குச் சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையைத் தேடினார். பயனில்லை. கவலையோடு வீட்டுக்கு வந்தார். மறுநாளும் தேடினார். ஏமாற்றம் தான். பித்துப்பிடித்தவர் போல ஆனார். மூன்றாம் காலையில் எழும்போது நீலவானமும், அதில் பறக்கும் பறவைக் கூட்டமும் நல்ல சகுனமாகத் தெரிந்தது. நம்பிக்கையுடன் ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கிப் பார்த்தார். அதுவரை அவருடன் கண்ணாமூச்சி ஆடிய பாலா, அவரது கைக்குள் தானாகவே வந்து கிடைத்தாள். அந்தச் சிலை சுண்டுவிரல் அளவே இருந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

வீடே கோயிலானது: தன் வீட்டிலேயே பாலாவை பிரதிஷ்டை செய்தார். அய்யரின் வீடே கோயிலாக மாறியது. இந்த வீட்டை பாலா பீடம்  என்று அழைக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன் கருவூர்சித்தரின் பாடல்களில் பாலாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. கருவூர் சித்தர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் பாலாவின் சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து ஒருவாரம் தங்கி வழிபாடு செய்திருக்கிறார்.

சாக்லெட் பிரசாதம்: குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சரஸ்வதியின் அம்சமாக திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபகசக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.

 
     
  தல வரலாறு:
     
  லலிதாம்பிகையின் பரிவாரங்களோடு போரிட்டு தோற்றான் பண்டாசுரன். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும் அழித்தால் தான் தேவர்களுக்கு நிம்மதி என்பதால், லலிதாவின் மகளான ஒன்பது வயது பாலா புறப்பட்டாள். தாய் தடுத்தும் அடம்பிடித்தாள். எனவே, லலிதாம்பிகை தன் கவசத்தில் இருந்து சிறுகவசத்தை தோற்றுவித்து மகளின் உடலில்அணிவித்தாள். தேரேறிப் புறப்பட்ட பாலா பண்டாசுரனின் புத்திரர்களைத் தோற்கடித்தாள். வெற்றியுடன் திரும்பிய மகளை ஆரத்தழுவி முத்தமிட்டாள். அன்னை லலிதாம்பிகையுடன் மகள் ஐக்கியமானாள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.