Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி)
  ஊர்: மைஹர்
  மாவட்டம்: சத்னா
  மாநிலம்: மத்திய பிரதேசம்
 
 திருவிழா:
     
  நவராத்திரி, அஷ்டமி நாளில் இங்கே சிறப்பு பூஜை நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்,மைஹர், சத்னா மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் கவுரிசங்கர், காலபைரவர், துர்க்கா, பிரம்மதேவி உள்ளிட்ட தெய்வ சன்னதிகளும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பிள்ளைப் பேறு கிட்டவும், கல்வி கலைகளில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலின் உச்சிக்குச் செல்ல 1063 படிகள் உள்ளன. கார், பஸ் செல்ல சாலை வசதியும் உள்ளது. அவை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடும். அங்கிருந்து 60 படிகளில் ஏறிச் சென்றுதான் தேவியை தரிசிக்க வேண்டும். ஊனமுற்றவர்கள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகிறார்கள். ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
     
  தல வரலாறு:
     
  பிரம்மதேவனின் மானச புத்திரனான தட்சப் பிரஜாபதி, தன் மருமகனான  சிவபெருமானை அழைக்காமல் யாகம் புரிந்ததும்; தந்தையிடம் சென்று நியாயம் கேட்ட தாட்சாயணி (சதிதேவி) அவனது அவமரியாதையைப் பொறுக்காமல் யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டதும்; இதையறிந்த சிவபெருமான் வீரபத்திரரை உருவாக்கி தட்சனின் யாகத்தை அழித்தார் என்பதும் புராணக்கூற்று. கோபம் மிக்கெழுந்த சிவபெருமான், தீயில் இறந்துபோன மனைவியைத் தன் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவமாடினார். உலகங்களனைத்தும் நடுங்கின. ஊழியின் முடிவு நெருங்குவது போலாயிற்று. அப்போது சிவனை சாந்தப்படுத்தி உலக உயிர்களைக் காக்க எண்ணிய திருமால், தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீழ்த்தினார். தேவியின் பாரம் தன் மீதிருந்து விலகியதை உணர்ந்த சிவன், கோபம் தணிந்து யோகத்தில் ஆழ்ந்தார். சதி தேவியின் உடல் பாகங்கள் 51 பகுதிகளாக பூமியில் விழுந்தன. அவற்றையே சக்தி பீடங்களாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் தேவியின் மார்புப் பகுதி விழுந்த தலமாகத் திகழ்கிறது மைஹர் என்னும் திருத்தலம். மைஹர் என்னும் சொல்லுக்கு தாய்வீடு என்று பொருளாம். இங்குள்ள திரிகூட மலை உச்சியில் தேவியின் கோயில் அமைந்துள்ளது. இந்த அன்னை மைஹர் தேவி, சாரதா தேவி, சரஸ்வதி தேவி என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சாரதா தேவியின் கல்லாலான விக்ரகம் மிகப் பழமையானது என்று சொல்கிறார்கள். அன்னையின் காலடியில் கல்வெட்டொன்றும் காணப்படுகிறது. அது போலவே இங்குள்ள நரசிம்மர் விக்ரகமும் மிகப் பழமை வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரு சிற்பங்களையும் கி.பி. 502-ஆம் ஆண்டில் நூபுலதேவா என்பவர் பிரதிஷ்டை செய்தார் எனக் கூறுகின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.