Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு விக்னேஷ்வர்(அஷ்ட கணபதி-7) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு விக்னேஷ்வர்(அஷ்ட கணபதி-7) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விக்னேஷ்வர்
  ஊர்: ஓஜர்
  மாவட்டம்: புனே
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள விக்னேஷ்வர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு விக்னேஷ்வர் திருக்கோயில் ஓஜர், புனே, மகாராஷ்டிரா.  
   
    
 பொது தகவல்:
     
  கிரிஜாத்மஜ் ஆலயக் குன்று, குக்கடி என்ற நதியிலிருந்து சற்றத் தள்ளி அமைந்திருக்கிறது. ஓஜர் ஆலயம் குக்கடி நதிக்கரையிலேயே அமைந்துள்ளது. ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. நான்குபுறமும் மதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறம் நுழைந்தவுடனேயே இரு புறங்களிலும் அமைந்த தியானமண்டபங்களைக் காணலாம். பிராகாரத்தில் கல்லினால் செய்யப்பட்ட தீபமாலா எனும் இருபெரும் தூண்கள் உள்ளன. சதுர்த்தி மற்றும் விசேஷநாட்களில் இங்கு தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிலைவேற இங்குள்ள விக்னேஷ்வரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

மூலவர் விக்னேஷ்வர், கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தரும் இடஞ்சுழிப் பிள்ளையார். கண்களில் மாணிக்கமும், நெற்றியில் வைரமும், தொந்தியில் ரத்னங்களும் பதிக்கப்பட்டு ஜொலிக்கிறார். கர்ப்பகிரகம் மற்றும் கோஷ்டங்களில் சூரிய, சிவன், விஷ்ணு, தேவியுடன் விநாயகர் காட்சி அளிக்கிறார். ரித்தி சித்திகளின் விக்ரகங்கள் விநாயகரின் இருபுறங்களிலும் அமைந்துள்ளன. கோயில் நுழைவாயில் குறைந்த உயரம் கொண்டது.

ஒருமுறை பேஷ்வா பாஜிராவ் காலத்தில் அவரது சகோதரர் சிமாஜி அப்பா போருக்குப் புறப்படும் முன் விக்னேஷ்வரை வணங்க இங்கு வந்தாராம். குறைந்த உயரம் கொண்ட அரவது கிரீடம் நிலையில் பட்டு அது கீழே விழுந்தது. அந்தச் சம்பவத்தை அபசகுணமாகக் கருதிய சிமாஜி அப்பா, போரில் தாம் வெற்றி பெற்றால் கோயிலைப் புதுப்பிப்பதாக வேண்டிக்கொண்டார். அவ்வாறே அவரும் போரில் வெற்றிபெற, கோயில் புது வடிவம் பெற்றதுடன் இன்று வரை சிறப்பாகத் திகழ்ந்தும் வருகிறது.

 
     
  தல வரலாறு:
     
  பண்டைய காலத்தில் ஹேமாவதி என்ற நகரை அபினந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒரு சமயம், இந்திரப் பதவியை அடைய அவன் மனதில் ஆசை ஏற்பட்டது. சிரேஷ்ட முனிவர்களைக் கொண்டு பெரிய யாகம் ஒன்றைச் செய்ய முயற்சி செய்தான். அதன் விளைவாக தனது பதவிக்கு ஆபத்து விளையக்கூடும் என்று அச்சம் கொண்டான் இந்திரன். அபினந்தன் செய்யும் யாகத்திற்கு இடையூறு விளைவிக்க முடிவு செய்து காலனை ஏவுகிறான், இந்திரன். அதி பயங்கர வடிவத்தில் அசுர வேகத்தில் சென்ற காலன், அபினந்தனின் யாகத்தை முற்றிலும் அழிக்கிறான். அது தவிர மற்ற தவமுனிகள் செய்யும் பூஜைகளுக்கும் யாகங்களுக்கும் பங்கம் விளைவிக்கிறான். பீதியடைந்த மக்கள் விக்னாசுரன் என்ற பெயரை அவனுக்கு அளிக்கின்றனர். நாளடைவில் தர்ம காரியங்கள் குறைந்து அதர்மங்கள் தலையெடுக்கின்றன. முனிவர்களும் தேவர்களும் விநாயகரை பிரார்த்திக்கத் தொடங்குகின்றனர். பின்னர் பராசரர் ஆசிரமத்தில் அவர்களுக்குக் காட்சி அளித்த விநாயகர், தாம் அவதாரம் எடுத்து பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதன்படி விநாயகர் பார்ஸ்வ மகரிஷி, அவர் பத்தினி தீபவத்ஸலா தம்பதியர்க்கு புத்திரனாக அவதரிக்கிறார். தகுந்த வயதடைந்ததும் விக்னாசுரனுடன் போர் புரிய ஆயத்தமானான். இருவருக்கும் இடையே நடைபெறும் கோர யுத்தத்தில் அசுரன் தீ, மரம், புயம் என வெவ்வேறு மாய வடிவங்களை எடுக்கிறான். ஆனால் விநாயகரின் சக்திக்கு முன் அவை தவிடு பொடியாகின்றன. தோல்வியை ஒப்புக் கொண்ட விக்னாசுரன், விநாயகப் பெருமானைச் சரணடைகிறான். அவனுக்கு அபயம் அளித்த விநாயகர், எந்த எந்த இடங்களில் எனது பஜனை, பூஜை, கீர்த்தனைகள் நடைபெறுகின்றனவோ... அங்கெல்லாம் நீ செல்லக்கூடாது என்று கட்டளை இடுகிறார். ஒப்புக்கொண்ட விக்னாசுரன் பணிவுடன் விநாயகரிடம் வரம் ஒன்றையும் கேட்கிறான். பக்தர்கள் உங்களுடன் சேர்த்து என்னையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே தாங்கள் விக்னேஷ்வர் என்ற நாமத்தைப் பெற வேண்டும் என்கிறான். விக்னாசுரனின் வேண்டுகோளுக்கு விநாயகர் செவிசாய்க்கிறார். விக்னேஷ்வர் என்ற என் நாமத்தை ஜபிப்பவர்களின் அனைத்துக் காரியங்களும் விரைவில் பூர்த்தி ஆவதுடன் அவர்களுக்கு சித்தியும் கிடைக்கும் என்று அருளாசி வழங்குகிறார். பின்னர் தேவர்கள் விநாயகரின் மூர்த்தியை ஓஜர் என்ற இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விக்னேஷ்வர் இடஞ்சுழியாக அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.