Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்தையன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முத்தையன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்தையன்
  உற்சவர்: முத்தையன்
  தல விருட்சம்: காரமரம்
  புராண பெயர்: தென்னம்பாளையம்
  ஊர்: திருப்பூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி மாதம் யுகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) தினத்தை ஒட்டி நான்கு நாள் விசேஷத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அன்றைய தினம் பல தரப்பட்ட தானியங்களை வைத்து, முத்தையனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் திருவிழா இம்மாதத்தில் நடக்கிறது. கார்த்திகை தீபத்தின் போது மூன்று நாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவண்ணாமாலையில் ஒவ்வொரு மாதமும் நடுநிசியில் அமாவாசை சிறப்பு பூஜை நடக்கிறது. மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  முத்தையன் கையில் அரிவாளும், மற்றொரு கையில் வேலுடன் முருகனாக காட்சியளிக்கிறார். திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவில் உருவான சில நாட்களில் முத்தையன் கோவில் உருவானதால், செல்லாண்டியம்மன் தம்பி என புனைபெயர் கொண்டு முத்தையனை பக்தர்கள் அழைக்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல்1மணி வரை, மாலை5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  ஸ்ரீ முத்தையன் சுவாமி கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். 641 604  
   
போன்:
   
  +91 98941 48896, 92624 82298  
    
 பொது தகவல்:
     
  முத்தையன் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். கோவில் முன்புறத்தில் (முத்தையனுக்கு காவல் தெய்வமாக) கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சிலையும், வெளிவளாகத்தில் தெற்கு திசை  நோக்கி 25 அடியில் இரண்டு முனி சிலைகளும் உள்ளது. முத்தையனுக்கு இடதுபுறம் நாகர்; வலதுபுறம் விநாயகர் உள்ளார். நாகர் அருகில் ஐந்து தலை நாக சிலை உள்ளது. இதன் கழுத்து பகுதியில் சிவலிங்கம் உள்ளது என்பது இக்கோவில் பக்தர்கள் நம்பிக்கை.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம், தொழில் நலன் வேண்டி, ராகு-கேது பூஜைக்காக வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் வாகனங்களுக்கு சிறப்பு பூஜைக்காக பலர் வருகின்றனர்.
கோவில் கிணற்றில் இருக்கும் தண்ணீரை உடல் மேல் ஊத்திக் கொண்டு, கோவில் முன் இருக்கும் கருட கம்பத்தை 11 தடவை சுற்றி வருகிறார்கள் பெண்கள். இப்படி வந்து, முத்தையனிடம் வேண்டிய கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களது வேண்டுதல் நிறைவேறினால், விரதமிருந்து குடும்பத்துடன், முத்தையன் கோவிலுக்கு வந்து கிடாய் வெட்டி உற்றார், உறவினர்களை அழைத்து விருந்து உண்ணுகின்றனர். உயிருடன் சேவலை சக்திவேலில் குத்துகின்றனர். மாடுகளை வாங்கி கோவிலுக்காக விட்டுவிடுகின்றனர். குழந்தை பேறு பெற்றவர்கள் குழந்தைகளுக்கு காது, குத்தி, மொட்டை அடிக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  500 வருடமாக இருக்கும் நாகர் முன் இருக்கும் புற்றுக்கண் மண் எடுத்து திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில், கலந்து கொண்டு இந்த மண்ணை பெறுபவர்கள் உடலில் பூசிக் கொண்டால், அரிப்பு குணமாகிறது. இதற்காக, இதனை தவறாமல் பெற்று வருகின்றனர், சிலர். 14 ம் நூற்றாண்டுக்கு முன்பே புற்றுக்கண்ணை வணங்கி வந்ததாகவும், அதன் பின் வந்தனர்கள் சிலை வைத்து கோவில் கட்டியதாகவும், கோவிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் இப்பகுதியினர் நம்புகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வழியோர தெய்வமாக கோவில் இருந்தது. கடந்த 2012ம் ஆண்டு, புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 
     
  தல வரலாறு:
     
  500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் விவசாயிகள் பலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். ஒருவருடைய மாடு திடீரென காணமால் போய் விட்டது. அவர் காடு முழுவதும் தேடிக்கொண்டிருந்தார். மரத்தடி ஒன்றுக்கு சென்ற மாடு தன் பாலை, அங்கிருந்து மண்ணில் தானாக சுரந்து ஊற்றிக் கொண்டிருந்தது. ஓடி வந்த விவசாயி, அருகில் வந்த போது, மண் திடீரென புற்றுக்கண்ணாக மாறிவிட்டது. விழித்த விவசாயி, ஊருக்குள் சென்று நடந்ததை கூற, மற்றவர்கள் வந்து பார்த்து வியந்தனர். புற்றுக்கண் அருகில் கல் ஒன்றை வைத்து நாகராக வணங்க துவங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த புற்றுக்கண் இன்றும் கோவிலில் உள்ளது. விசேஷ தினங்களில் சிறப்பு பூஜை முதலில் நாகருக்கு நடத்தப்படுகிறது. புற்றுக்கண் அமைய பெற்ற இடம் முத்தையன் என்பவருக்கு சொந்தமானதாக இருந்ததால்,
முத்தையன் கோவில் என்ற பெயர் பேச்சு வழக்கு வந்து விட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோவில் முன்புறத்தில் (முத்தையனுக்கு காவல் தெய்வமாக) கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சிலையும், வெளிவளாகத்தில் தெற்கு திசை நோக்கி 25 அடியில் இரண்டு முனி சிலைகளும் உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.