Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு நல்மணீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நல்மணீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நல்மணீஸ்வரர், சவுந்தீஸ்வர சுவாமி
  அம்மன்/தாயார்: சவுந்திர வல்லி நாயகி
  தல விருட்சம்: வில்வம், பலாமரம்
  ஆகமம்/பூஜை : காமிகம்
  புராண பெயர்: வீரசோழசதுர்வேத மங்கலம். கற்றாங்காணி; காணி என்றால் பூமி என பொருள். அக்காலத்தில் சோழர்கள் நான்கு வேதங்களை கற்றவர்களுக்கு இப்பகுதியில் தானம் வழங்கினர். அதன் நினைவாக இவ்வூரின் பெயர் கற்றாங்காணி என அழைக்கப்பட்டது.
  ஊர்: கத்தாங்கண்ணி
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, சித்திரைக்கனி, ஆடி நாகஜோதி, பிரதோஷம், ஐப்பசி பவுர்ணமிகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. திருவண்ணமாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நாளில், இங்கும் தீபம் ஏற்றி, அன்னாபிஷேகத்துடன் பூஜை நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  தினமும் காலை 6.00 மணி முதல் 6.23 வரை, சூரிய ஒளி நல்மணீஸ்வரர் திருமேனியில் விழுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன் இரண்டு கற்கள் சேர்ந்தபடி வளர்ந்து, சிவன் சுயம்புவாக உருவாகியுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் நாள் முழுவதும். 
   
முகவரி:
   
  ஸ்ரீ சவுந்திர வல்லிநாயகி, அம்பிகா சமேத, ஸ்ரீ நல்மணீஸ்வர, சவுந்தீஸ்வர, சொக்கராஜ பெருமாள் கோவில். 161, கத்தாங்கண்ணி கிராமம், காங்கயம்- ஊத்துக்குளி வழி, திருப்பூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 9443106949 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு நோக்கி, ஈசானி மூலையை பார்த்தபடி மூலவர்; மூலவருக்கு வலது புறத்தில் (கருவறைக்கு வெளியே) சவுந்திரவல்லி நாயகி, வலது பக்கத்தில், தும்பிக்கையில் அமிர்த கலசத்துடன் விநாயகர். வெளிபிரகாரத்தில் தெற்கு பார்த்து பைரவர், சனீஸ்வரர் இருவரும் ஒரே கூரையின் கீழ் கையில் சேவல், தலையில் குடுமியுடன் முருகன். கோவிலின் கிழக்கு பகுதியில் சொக்கராஜா பெருமாள் கோவில்; தென்திசையில் வேலிமரத்தின் கீழ் நாகர் சன்னதி.  
     
 
பிரார்த்தனை
    
  வீற்றிருக்கும் காலபைரவர் சக்தி வாய்ந்தவராக மக்கள் கருதுகின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளில் தயிர்சாதம், வடைமாலை, சிவப்பு அரளிபூ மாலை சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். தொல்லை நீங்கி, நலமோடு வாழ்வு அமையும் மற்றும் கண்திருஷ்டி, செய்வினை தோஷம், பூமி தோஷம் நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டி பலர் வருகின்றனர். காலபைரவர் அருகே  சனீஸ்வர உள்ளதால், அவரை வழிபட்டால் கெடுபலன் நீங்கி சுபபலன் அமையும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியன்று ஏழு நெய் தீபத்துடன் அபிஷேக பூஜை செய்தால் கணவன்- மனைவி ஒற்றுமை கூடும் என்பதும் நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  நினைத்த காரியம் கை கூடியவர்கள், சிவராத்திரியன்று அபிஷேக பூஜை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்த கோவில், இருந்ததாக அறியப்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர்; கடந்த 2013 ம் ஆண்டு, ஆகஸ்ட் 8 ம் தேதி கோவிலில் ஆய்வு நடத்தியுள்ளனர். சோழ மன்னர் காலத்தில் பழையாறில் அரச மகளிர் வசிக்கும் அந்தப்புரக் கோட்டையில் இருந்தவள், துர்க்கை. சோழர்கள் காலத்தில் பட்டீஸ்வரத்தில் துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 அங்குள்ள விநாயகர் தும்பிக்கையில் அமிர்த கலசம் வைத்திருப்பார். இந்த கோவிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையில் அமிர்த கலவசம் வைத்துள்ளார். இதன் மூலம் இது சோழர் காலத்து கோவில் என்பது புலனாகிறது. மதுரை, அவிநாசி மற்றும் பெரியபாளையத்துக்கு அடுத்ததாக, மூலவருக்கு வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது, இங்கு மட்டும் தான். பாலதண்டாயுதபாணி இடது கையில் சேவலும், வலது கையில் தண்டாயுதமும், தலையில் குடுமியுடன் வித்தியசமாக உள்ளார். ஸ்தல விருட்சகமாக பாலமரம் உள்ளதால், வாஸ்து நாளில் வணங்கி, வழிபாடு செய்து, புதிய வீடு மனை துவங்குவோருக்கு நல்லது நடக்கிறது  இந்த கோயிலில் ஸ்தல விருட்சகத்தை வணங்கி விட்டு, முகூர்த்த கால் பலர் நடுகின்றனர்.

கோவிலுக்கு தெற்கே உள்ள நாகராஜ் சன்னதிக்கு, ஆடி மாத நாக சதுர்த்தியின் போது, சர்பம் (பாம்பு) வந்து செல்வதாக ஐதீகம். பைரவர் வலது பக்கம் வாகனம் உள்ளது, இந்த கோவிலில் தான். பில்லி, சூனியம், ஏவல், பாவங்கள் போக்குவர் என்பது நம்பிக்கை.
 
     
  தல வரலாறு:
     
  மகாபாரத காலத்தில், பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது விராடபுரம் (தாராபுரம்) பகுதிக்கு வந்த போது நகுலன், தன் இழந்த ராஜ்யத்தையும், பதவிகளையும் மறுபடியும் பெற வேண்டி இந்த ஆலயத்துக்கு பிரதோஷ நாளில் வந்து வழிபாடு நடத்தியுள்ளார். ருத்ர மந்திரத்தை கூறி பூஜித்ததால், இழந்த ராஜ்ஜியம், பதவிகள் கிடைத்தாக செப்பேடுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வீரசோழபுரம் என இவ்வூரின் பெயர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த சோழர்கள் சிவனை வழிபட்டதால், இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு வந்து ஆட்சி புரிந்த சோழர்கள் நான்கு வேதங்களை படித்தவர்களுக்கு தானம் வழங்கினர். கற்றோருக்கு தானம்
 வழங்கியதால், இக்கோவிலின் பெயர் கற்றாங்காணி என மாறியுள்ளது. இப்பகுதிக்கு வந்த பரந்தக சோழன் கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம் இருந்தும், தற்போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் கூட கோவில் இல்லை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் காலை 6.00 மணி முதல் 6.23 வரை, சூரிய ஒளி நல்மணீஸ்வரர் திருமேனியில் விழுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன் இரண்டு கற்கள் சேர்ந்தபடி வளர்ந்து, சிவன் சுயம்புவாக உருவாகியுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.