Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐராவதீஸ்வரர்
  அம்மன்/தாயார்: அபிஷேகவல்லி
  தல விருட்சம்: மகிழ, வில்வ மரம்
  ஊர்: அபிஷேகபுரம்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷ பூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார். அர்த்தமண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகுஐராவதீஸ்வர சுவாமி திருக்கோவில் அபிஷேகபுரம், மேற்குப்பதி அஞ்சல் குன்னத்தூர் வழி, திருப்பூர் மாவட்டம் -638 103.  
   
போன்:
   
  +91 99947 10322, 95665 - 01312 
    
 பொது தகவல்:
     
  மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார். அர்த்தமண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப்பட்டுள்ளது. மகாமண்டபம் அற்புதமான கலை அம்சங்களோடு திகழ்கிறது. மண்டபத்தூண்களில் பட்டீஸ்வரர். துவார விநாயகர் சிற்பங்கள் உள்ளன. குழந்தையை விழுங்கும் முதலை, ஐராவதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் நாகம், மயிலின் சிற்பமும் உள்ளன. மேலும் அர்த்தமண்டபத்தில் உள்ள ராமரின் சிற்பம் அற்புதமாக உள்ளவை. ஆண்டாள், ரிஷிகளின் வடிவங்களும் இருக்கின்றன. விதானத்தில் சிவபூஜை செய்யும் அம்பிகையின் திருக்கோலம் காணப்படுகிறது. மகாமண்டபத்தின் துணை சன்னிதியில் துவார விநாயகர் தண்டபாணியின் திருவுருவமும் வடிக்கப்பட்டுள்ளன.

நந்தி அழகுற அமைந்திருக்க, துவாரபாலகர்கள் கம்பீரமாக உள்ளனர். வசந்த மண்டபத்தில் சூரியன், சந்திரன், நால்வரோடு சேக்கிழாருக்கும் சன்னிதி உள்ளது. சனி பகவானுக்கு தனி சன்னிதி இருக்கிறது. நவகிரக சன்னிதியும் கால பைரவரின் சன்னிதியும் வெகுநேர்த்தியாக அமைந்துள்ளன. திருக்கோயில் வளாகத்தில் அழகு ராஜப் பெருமாள் ஸ்ரீதேவி -பூதேவியுடன் வீற்றிருக்கிறார். அவருக்கு முன் புறம் நான்கு அடி உயரத்தில் துவார பாலகர்கள் ஜெயன், விஜயன் உள்ளார்கள் மூலவரை நோக்கி கருடனின் சிலை உள்ளது. ஒரே வளாகத்தில் கோயில்கள் இருப்பினும் ஐராவதேஸ்வரருக்கு தனி தீபஸ்தம்பம், அழகு ராஜப் பெருமாளுக்கு தனி தீபஸ்தம்பமும் கட்டப்பட்டுள்ளது. வள்ளி - தெய்வானையுடன் வீற்றிருக்கும் சுப்ரமணியர் சன்னிதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. இச்சன்னிதி விஜயநகரப் பேரரசு காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. மகிழ மரமும் வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன. வடதிசை நோக்கி கூப்பியகரங்களோடு தனிச் சன்னதியில் காட்சி தரும் வீர அனுமனின் கம்பீரத் தோற்றத்தில் உள்ளார்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு அருட்காட்சி தரும் ஈசனையும் அம்பிகையையும் வேண்டினால் சகல பிணிகளும் தீரும்; சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிப்புகுள்ளானவர்களும் வணங்கி நற்பேறு அடைந்திருக்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  வாரிசு இல்லாத தம்பதியர் இத்தலம் வந்து வில்வ மாலையை ஐராவதேஸ்வரருக்கு அணிவித்து வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அம்பாள் அபிஷேகவல்லி தனிச் சன்னதியில் அழகிய பத்மபீடத்தின் மீது நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றாள். மேலிரு கரங்களில் பத்மங்களையும், கீழிரு கரங்கள் அபயவரத முத்திரைகளையும் கொண்டு, வேண்டும் வரங்களை அருளும் தாயாக தரிசனம் தருகிறாள். அம்பிகை, வெள்ளிக்கிழமைகளில் பூவாக்கு கேட்க வரும் பெண்களின் கூட்டம் அதிகம் வருகின்றனர். அபிஷேகவல்லியின் கோஷ்டத்தில் வராகி. மகாலட்சுமி, சாமுண்டி உள்ளனர். மேற்கு பிராகாரத்தில் சப்த கன்னியர் அழகிய படைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றனர். இக்கோயிலில் காணப்படும் தசாவதாரச் சிற்பங்கள் கலை அழகுமிக்கவை. பிராகாரத்தைச் சுற்றி வந்தால் மங்கள விநாயகர் உள்ளார்.
 
     
  தல வரலாறு:
     
  சதா அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு கோயில் அமைந்த ஊரின் பெயரிலேயே அபிஷேகம் அமைந்தது. அபிஷேகபுரம் என்ற அந்தத் தலத்தில் கொங்கு சோழர்கால கட்டடக் கலையில் உருவானது. ஐராவதீஸ்வரர் கோயில். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரராஜேந்திர சோழனால் இது கட்டப்பட்டது. என்பதை இங்கு காணப்படும். இரண்டு கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இந்திரனின் யானையான ஐராவதத்தின் சாபத்தை நீக்கியவர் என்பதால் இக்கோயில் இறைவன் ஐராவதீஸ்வரர்.

ஒரு சமயம் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்திரனின் வாகனமான ஐராவதத்தால் அங்கிருந்த முனிவரின் தவம் கலைந்துபோனது வெகுண்டெழுந்த முனிவர் யானையை பூனையாக மாற சாபமிட்டு, மீண்டும் தவத்தில் ஆழ்ந்துபோனார். நடந்த விவரத்தை நாரதர் மூலம் அறிந்து வருந்திய இந்திரன், பூனையாக உருவமாறிய ஐராவதம் பழையபடி யானையாக மாற, பாவ விமோசனம் கேட்டு அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினார். அபிஷேகபுரத்தில் ஒரு மண்டலம் தங்கியிருந்து தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன் இறைவனை நன்னீராட்டி ஆராதித்து வர, பழைய உருவை ஐராவதம் அடையும், என்று அம்பாள் கூற, ஐராவதம் அதன்படியே செய்து தனது பழைய உருவை அடைந்தது என்பது தலவரலாறு.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார். அர்த்தமண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar