Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பகவதி அம்மன்
  அம்மன்/தாயார்: பகவதி அம்மன்
  புராண பெயர்: காடன் அம்பு எய்த அழா
  ஊர்: காடாம்புழா
  மாவட்டம்: மலப்புரம்
  மாநிலம்: கேரளா
 
பாடியவர்கள்:
     
  ஆதிசங்கரர்

காடாம்புழா ஸ்ரீபகவதி தியான ஸ்லோகம்

ச்யாமாம்பரீஹி இலாப சேகரயுதாம் ஆபத்தபர்ணாம்கதாம்
குஞ்சாஹார லசல்பயோதரபராம் அஷ்டாஹியான் பிப்ரதீம்
தாடங்காங்கத மேகலா குணரணன் மஞ்சீரிதாம் ப்ராபிதாம்
கயிராதீம் வரதாபய துவிதிகராம் தேவிம்த்ரிநேத்ராம் பஜே!
 
     
 திருவிழா:
     
  இங்கு பூ மூடல், முட்டறுக்கல் (தேங்காய் உடைத்தல்) திரிகால பூஜை இவை நடைபெறும். இவற்றில் இங்கு பூ மூடல் மிகவும் பிரசித்தம்.  
     
 தல சிறப்பு:
     
  ஆதிசங்கரர் பாடிய தலம் என்பது சிறப்பு  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், காடாம்புழா, மலப்புரம், கேரளா-676553.  
   
போன்:
   
  +91 494-2615790 
    
 பொது தகவல்:
     
  ஸ்ரீஆதிசங்கரர் கருவறைக்கு வெளியில் ஸ்ரீநரசிம்மத்தையும் ஸ்ரீசுதர்சன சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தை தணித்தார். கர்ப்பக்கிரகத்தில் கணபதி விஷ்ணுசங்கல்ப பூஜைகள் நடத்துவதுண்டு. கருவறைக்கு வடக்கு பாகத்தில் நாககன்னிகா பிரதிஷ்டையும், கோயிலை சுற்றி வெளியில் தெற்கு பாகத்தில் ஸ்ரீஐயப்பசாமி பிரதிஷ்டையும் உண்டு. ஸ்ரீநாராயணன் எம்பராந்திரி தான் மேல் சாந்தி (அர்ச்சகர்) ஆகும். ஒரு சமயம் காட்டு வேடம் கொண்ட இறைவனும் இறைவியும் காட்டில் வந்து கொண்டு இருக்கும் பொழுது ஸ்ரீபார்வதி தேவிக்கு தாகம் ஏற்பட்டது. அதை அறிந்த இறைவன் பூமியின் மீது அம்பு எய்தி கங்கை நீரை வரச்செய்து இறைவிக்கு கொடுத்து தாகம் தீர்த்தான். இந்நிகழ்ச்சியை மலையாளத்தில் காடன் அம்பு எய்த அழா என்பார்கள்.

இது நாளடைவில் மறுவி காடாம்புழா என ஆனது. இங்கு அம்பாளை வித்யா, துர்க்கா,(சரஸ்வதி) வனதுர்க்கா (துர்க்கா தேவி) ஆதி துர்க்கா (மூல துர்க்கா ஸ்ரீஇலட்சுமியாக) வழிபடுகின்றார்கள். துர்க்கையாக பக்தர்களுக்கு தேக ஆரோக்கியம், விரைவில் திருமணம் சரஸ்வதியாக நல்ல படிப்பறிவு, வேலை வாய்ப்பு மற்றும் ஸ்ரீஇலட்சுமியாக, செல்வமும் வாரி வழங்கி, வளமுடன் வாழ ஸ்ரீபகவதி தேவி ஆசிர்வதிக்கின்றார்கள். இங்கு பூ மூடலுக்கு 2045ம் வருடம் வரை பக்தர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இப்பொழுது 2045ம் வருடம் வரை முன் பதிவு இல்லை. பக்தர்கள் தங்களின் (நட்சத்திர தினத்தின் போது) செய்ய தேவையான ரொக்கத்தை நேரில் செலுத்தலாம் அல்லது வங்கி டி.டி. மூலம் அனுப்பவும். வழிபாடு பிரசாதம் பெற ரூ. 6.00 வழிபாடு பணத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வரும் பக்தர்கள் முக்கிய பிரார்த்தனையாக தேக முட்டு, கர்ம முட்டு, பூமி முட்டு, கிரக முட்டு, வித்யா முட்டு, மாங்கல்ய முட்டு, சந்தான முட்டு, சத்ரு முட்டு, வாகன முட்டு என்ற பல சங்கடங்களும் தீர்ந்து போக வேண்டி பிரார்த்தித்து முட்டறுக்கல் வழிபாடு செய்கின்றார்கள். (முட்டு ன்றால் தடங்கல்).
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆடி வெள்ளி, தை வெள்ளி போன்ற நாட்களில் முட்டருக்கும் வேண்டுதலில் குறைந்தது 25000க்கு மேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் பிராத்திப்பதாக சொல்லுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  முட்டறுக்கல் என்பது மனிதனுக்கு வந்து சேரும் கஷ்டம், தடங்கல், வியாதி, சூன்யப்பிணிகள் போன்றவற்றை நீக்குவதாகும். இதற்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு ரசீதும் ஒரு தேங்காயுமாக அர்ச்சகரிடம் கொடுத்து நட்சத்திரம், பெயர், என்ன காரியத்திற்காக இந்த வேண்டுதல் என்ற விவரங்களை சொன்னால், அர்ச்சகர் நமக்காக அதை ஸ்ரீபகவதியின் முன்நின்று உடைப்பார். தேங்காய் உடையும் நிலையை வைத்து காரியம் நடக்குமா, தோஷம் தீர்ந்ததா, பயம் ஏதும் உண்டா என்பதை அம்பாள் முன் அர்ச்சகர் நமக்கு சொல்வார். இரண்டு மூடிகளும் பக்தர்களுக்கே பிரசாதமாக திருப்பி கொடுத்து விடுவார்கள். தினசரி 7000 முதல் 20000 வரை முட்டறுக்கள் (தேங்காய் உடைத்தல்) இங்கு நடக்கின்றது. ஸ்ரீபகவதி தேவஸ்தானம் தினமும் பக்தர்கள் தங்குவதற்கென சத்திரம் (கட்டிடம்) கட்டப்பட்டு வருகின்றது. இங்கு வரும் பக்தர்களுக்கு இலவச மதிய உணவு (பிரசாத ஊட்டு) ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கு கொண்டு பக்தர்கள் நன்கொடையை (பிரசாத ஊட்டு நிதியின்) மூலம் அளிக்கலாம். தேவஸ்தானம் 1987-ஆம் ஆண்டு முதல் தர்ம மருத்துவமனையை துவக்கி இதில் இலவச மருத்துவ சிகிச்சைகளும், இலவசமாக மருந்தும் எல்லா நோயாளிகளுக்கும் ஜாதி, சமய வேறுபாடின்றி கொடுத்து நன்கு நடத்தி வருகின்றார்கள். தேவஸ்தானம் இந்த தூய சேவையை செய்வதன் மூலம் பகவதி அம்மாவின் கருணையும், அருளும் எல்லா பக்தர்களுக்கும் கிடைக்க இதை செய்து வருகின்றது. தேவஸ்தானம் இந்த தொண்டை அதாவது மருத்துவ வசதியை இன்னும் விரிவுபடுத்தும் எண்ணம் கொண்டுள்ளது. பக்தர்கள் மனமுவந்து நன்கொடை கொடுத்து இதில் பங்கு கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். இங்கு எல்லா நாட்களிலும் பக்தர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  மகாபாரதத்தில் அர்ச்சுனன் யுத்தம் செய்து நாட்டைப் பெற சிவனை வணங்கி தியானம் செய்து வரம் பெற்று பாசுபதாஸ்திரத்தை பெற அர்ச்சுனன் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவனும் பார்வதியும் அர்ச்சுனனின் அகங்காரத்தைப் போக்கி அருள்தர நினைத்தனர். இதற்காக சிவன் காட்டு வேடுவனாகவும் பார்வதி தேவி வேடவப் பெண்ணாகவும் தோன்றினர். அதே சமயம் துரியோதனனால் ஏவப்பட்ட முகாசுரன் பன்றி உருவில் தோன்றி அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முற்பட்டான். இதை உணர்ந்த வேடவராக வந்த சிவன் அம்பு எய்தி பன்றியைக் கொன்றார். அப்பொழுது தபஸில் உணர்ந்த கலைந்த அர்ச்சுனனும் அம்பு எய்தினான். இதனால் வேடவராக வந்த சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் சண்டை நடந்தது. இதைக் கண்ட வேடவப் பெண்ணாக வந்த பார்வதி தேவி அர்ச்சுனனைத் தடுத்து உன் அம்புகள் யாவும் என் தெய்வத்தின் மேல் (ஈஸ்வரன் மேல்) மலர்களாக பொழியட்டும் என்றாள்.

அர்ச்சுனன் எய்த அம்புகள் அனைத்தும் மலர்களாக மாறியதால் அர்ச்சுனன் அங்கே தோற்றுப்போய் மயங்கி விழுந்தான். பின் கண்விழித்த அர்ச்சுனன். தன் முன்னே சிவனும், பார்வதியும் நிற்பதைக் கண்டு வேட உருவில் வந்தது சிவனே என உணர்ந்து சிவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்து மன்னிப்புக் கேட்டான். மனமகிழ்ந்து சிவனும் பார்வதியும் அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் தந்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தோன்றிய வேடவப் பெண் ஸ்ரீபார்வதி தேவி தற்போது கோவில் கொண்டுள்ள காடாம்புழா ஸ்ரீபகவதியே ஆகும். ஸ்ரீஆதிசங்கரர் சர்வஞ்ஞபீடமேறி தீர்த்தாடனம் செய்தபோது கோயிலின் மேற்கு பாகம் வழியாக யாத்திரை சென்றார். அப்போது அங்கு ஒரு தெய்வீக ஒளிதோன்ற, ஆதிசங்கரர் அதன் அருகில் செல்ல முயன்றார். ஆனால் அந்த ஒளி ஒரு துவாரத்தில் ஊடுருவி மறைந்தது. உடனே ஸ்ரீஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்து கிராத பார்வதி தேவி மாத்ரு பாவத்தில் இருப்பதைக் கண்டார்.

உடனே சுவாமிகள் பூஜைக்கான சாமான்கள் கொண்டு வரச்செய்து அந்த இடத்தில் அம்பாளை ஆவாகனம் செய்தார். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த கோயிலின் பூஜை செய்யும் முறையை ஸ்ரீஆதிசங்கரர் கொண்டு வந்தார். ஒரு துவாரத்தில் ஒளி நுழைந்தால் அந்த துவாரம் தான் சைதன்ய ஸ்தானமாய் விளங்குகிறது. அந்த துவாரத்தை அடைத்து அதன் மேல் பூ மூடல் பூஜை செய்தார் ஸ்ரீஆதிசங்கரர். கருவறையை 4 அடி நீளமும் 3 அடி அகலமும் உடைய கருங்கல்லால் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் நடுவில் தான் அம்பாள் தோன்றிய துவாரம் உள்ளது. இந்த துவாரம் 5 அங்குல சுற்றளவு கொண்டது. இந்த இடத்தில் ஸ்ரீபகவதி தேவி குடிகொண்டு பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்கள்.

தகவல்: N.சுப்ரமணியன், சென்னை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆதிசங்கரர் பாடிய தலம் என்பது சிறப்பு
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.