Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெங்கடேச பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: பெருமாள் மலை
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அக்னி மூலையில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளிலும் மற்றும் அனுமன் ஜெயந்தி அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்யகாலங்கள் உண்டு. தமிழ் மாதக் கணக்கின்படி ஆவணி, கார்த்திகை, மாசி, வைகாசி மாத முதல் தேதி விஷ்ணுபதி புண்யகாலம் வருகிறது. இந்தக் காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் ஆவணி மாத விஷ்ணுபதி புண்யகால பூஜை மிக விமரிசையாக நடக்கிறது. இந்த வைபத்தின் முதல் நாள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கலச ஆவாஹனமும், மறுநாள் காலை ஏழு மணிக்கு திருமஞ்சனம், அலங்கார பூஜை செய்யப்படுகிறது. அடுத்து சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், வருண ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் என வரிசையாக நடக்கின்றன. ஹோமங்கள் முடிந்து திருக்கல்யாண உற்சவம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை உண்டு. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  ராமானுஜர் இத்தலப் பெருமாளை தரிசித்திருப்பதும், இங்கு மூன்று ஆஞ்சநேயர்கள் சேவை சாதிப்பதும் சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை, சனிக்கிழமைகளில் காலை 7- மாலை 4 வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில், பெருமாள் மலை, காங்கயம் வட்டம், திருப்பூர் - 638701  
   
    
 பொது தகவல்:
     
  அடிவாரத்திலிருந்து 74 படிகள் ஏறிச் சென்றால் கோயிலை அடையலாம். கிழக்கு நோக்கி அமைந்த அழகிய திருக்கோயிலின் முன் பலிபீடம், தீபஸ்தம்பம் அமைந்துள்ளது. அதையொட்டி கற்பலகையில் ஆஞ்சநேயரும், தனிமண்டபத்தில் பறவை வடிவில் ஒரு கருடாழ்வாரும், இன்னொருவர் மகாமண்டபத்தில் மூலவரை நோக்கி கரம் குவித்தவாறும் காட்சியளிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயர், ராமானுஜர் தரிசனம் தருகிறார். ஈசான்ய மூலையில் வேப்ப மரமும், வெள்ளை வேல மரமும் இணைந்து குடையாக இருக்க அதனடியில் விஷ்வக்சேனர், நாகருடன் அற்புத தரிசனம் தருகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  மனபாரம் மறையவும், பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்றுசேரவும், கடன் தொல்லை நீங்கவும் தொழில் வளர்ச்சி ஏற்படவும், சகல பிரச்னைகள் தீரவும் இவரை வழிபட்டு ஏராளமானோர் பலன் பெற்றிருக்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகளை நிறைவேற்றித்தந்த பெருமாளுக்கு நன்றிக்கடனாக சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  விஷ்ணுபதி புண்யகால பூஜையானது பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடிப்பதற்குச் சமமாகும். தினசரி பூஜைகளை செய்யாதவர்கள்கூட விஷ்ணுபதி போன்ற பண்யகால பூஜை மட்டுமாவது மேற்கொண்டால் அவர்களுக்கு நற்பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த வைபத்தின் முதல் நாள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கலச ஆவாஹனமும், மறுநாள் காலை ஏழு மணிக்கு திருமஞ்சனம், அலங்கார பூஜை செய்யப்படுகிறது. அடுத்து சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், வருண ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் என வரிசையாக நடக்கின்றன. இப்பூஜையில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தால் குடும்ப ஒற்றுமை, கல்வி வளம், செய்யும் தொழிலில் வளர்ச்சி, திருமண யோகம், மாங்கல்ய பலம், மகப்பேறு உள்பட சகல சம்பத்தும் கிட்டும் என்பது உறுதி. மூன்றாவது சனிக்கிழமை உற்சவர் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தருகிறார். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை விசேஷ பூஜை உண்டு.  
     
  தல வரலாறு:
     
  காங்கேய நாட்டின் கிழக்குத் திசையில் சிவன்மலை சுப்ரமணிய சுவாமியும், மேற்கு திசையில் அழகு மலை முத்துக்குமார சுவாமியும், வடக்கு திசையில் கதித்த மலை வெற்றி வேலாயுத சுவாமியும், தெற்கு திசையில் வட்டமலை உத்தண்ட வேலாயுத சுவாமியும் அருள்பாலிக்கின்றனர். நான்கு திசைகளில் முருகப்பெருமான் அருளாட்சி நடத்திட, மத்தியில் உள்ள மலையில் அவரது தாய் மாமன் பெருமாள் கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார். இது பெருமாள்மலை என்றே அழைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் இங்கு கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறு தொழில் செய்யும் பக்தர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைய, மிகுந்த வேதனையோடு இப்பெருமாளிடம் வந்து, தினமும் உன்னை வந்து துதிக்கிறேன். இருந்தாலும் என் கஷ்டங்கள் தீர்ந்த பாடில்லை. இனியாவது எனக்கு கருணை காட்டுங்கள். என மனமுருக வேண்டினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், இனி உன் கஷ்டங்கள் அகலும். அனைத்து செல்வங்களும் உன்னை வந்தடையும் என்று வரம் தர, ஓரிரு ஆண்டுகளிலேயே அந்த பக்தர் சிறு தொழிலில் லாபங்கள் குவிந்து பெரும் முதலாளியாக உருவெடுத்திருக்கிறார். பின்னர் தனக்கு வாழ்வளித்த பெருமாளுக்கு நன்றிகடனாக பல திருப்பணிகளை செய்துள்ளார். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக நின்ற நிலையில் சேவை சாதிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராமானுஜர் இத்தலப் பெருமாளை தரிசித்திருப்பதும், இங்கு மூன்று ஆஞ்சநேயர்கள் சேவை சாதிப்பதும் சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.