Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சீனிவாசப்பெருமாள்
  அம்மன்/தாயார்: அலர்மேல் மங்கை, ஆண்டாள்
  தல விருட்சம்: மாமரம்
  ஊர்: ராமகிருஷ்ணபுரம்
  மாவட்டம்: புதுடில்லி
  மாநிலம்: டெல்லி
 
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமியன்று கஜேந்திர மோட்ச வைபவம் விழா நடக்கிறது. வசந்த மண்டபத்தின் அருகில், பெருமாளால் மோட்சம் வழங்கப்பட்ட கஜேந்திரன் என்னும் யானை சிலை உள்ளது. இந்த வைபவத்தின் போது, ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு யானை நீராட வரும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது. இந்நாளில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். புரட்டாசியில் பிரம்மோற்ஸவமும், மூன்றாம் சனிக்கிழமையில் மகா நிவேதனமும் பெருமாளுக்கு நடக்கும். கார்த்திகை உத்திரட்டாதியன்று நடக்கும் வார்ஷீக உற்ஸவத்தன்று காலையில் திருமஞ்சனமும் (அபிஷேகம்), மாலையில் வீதியுலாவும் நடக்கும். ஆழ்வார், ஆச்சார்யார் திருநட்சத்திரம், ராமானுர் ஜெயந்தி ஆகியவையும் சிறப்பாக நடக்கிறது. செவ்வாயன்று ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், மார்கழி மூல நட்சத்திரத்தன்று வடைமாலை சேவை நடக்கும். விழா காலத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  தல விருட்சமாக மாமரம் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் தன்மை கொண்டது சிறப்புக்குரியதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மணி12 வரை, மாலை5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், ராமகிருஷ்ணபுரம், டில்லி.  
   
போன்:
   
  +91  
    
 பொது தகவல்:
     
  டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா (பாலாஜி) மந்திர் என்னும் பெயரில் திருப்பதி சீனிவாசப்பெருமாளுக்கு கோவில் உள்ளது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 41 அடி உயர கொடி மரம் செப்பு கவசத்துடன் உள்ளது.  ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், நிகமாந்த மகாதேசிகன், லட்சுமி நரசிம்மர், விஜயவல்லி சமேத சுதர்சனாழ்வார், ஹயக்ரீவர், பால கோபால், ஆதிவராகர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள கண்ணாடி அறை கலைநயம் மிக்கது. இங்குள்ள நந்தவனத்தில் அன்றாட பூஜைக்குரிய பூக்கள், துளசி சேகரிக்கப்படுகின்றன. நம்மாழ்வார் சன்னிதிக்கு மேல் குடை விரித்தது போல மகிழ மரம் ஒன்றுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது அனைத்து தேவைகளையும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருப்பதி போலவே இங்கும் பக்தர்கள் தங்களின் விருப்பம் நிறைவேற பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துகின்றனர். காது குத்துதல், அங்கப்பிரதட்சிணம், அட்சர அப்யாசம் போன்ற வேண்டுதல்களும் நிறைவேற்றப்படுகின்றன. 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள பாடசாலையில் ஸ்தோத்திரம், பாடல்கள் பக்தர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது கோபூஜை நடக்கிறது.

 
     
  தல வரலாறு:
     
  50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வேலைவாய்ப்பு, குடும்பசூழல் காரணமாக குடியேறிய தமிழர்கள் இந்தக் கோயிலை நிர்மாணித்து வழிபாடு செய்யத் தொடங்கினர். நீதிபதி ராஜகோபால அய்யங்காரின் தலைமையில் ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டம் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஸ்ரீ வேங்கடஸ்வரா மந்திர் ஒசாசைட்டியால் நிர்வகிக்கப்படுகிறது. கருவறையில் சீனிவாசப்பெருமாள் மூலவராகவும், அலர்மேல் மங்கை தாயார் தனி சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தல விருட்சமாக மாமரம் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் தன்மை கொண்டது சிறப்புக்குரியதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.