Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாமாயா தேவி
  அம்மன்/தாயார்: மகாமாயா தேவி
  புராண பெயர்: மணிப்பூர்
  ஊர்: ரத்தன்பூர்
  மாவட்டம்: பிலாஸ்பூர்
  மாநிலம்: சட்டீஸ்கர்
 
 திருவிழா:
     
  இங்கு நவராத்திரிவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
திறக்கும் நேரம்:
    
 - 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாமாயா தேவி திருக்கோயில், ரத்தன்பூர், பிலாஸ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலம்.  
   
    
 பொது தகவல்:
     
  மகாகாளி, லட்சுமி, சரஸ்வதி சன்னிதிகளும் இங்குள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பருவமடையாத சிறுமிகள் இந்த அன்னையை வணங்கினால், பிற்காலத்தில் மகிழ்வான மணவாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களது வேண்டுதல்களை தேவிமுன் வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் நவராத்திரி நாட்களில் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இதனால் நவராத்திரி காலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 
    
  தல வரலாறு:
     
  எல்லாம் வல்ல ஈசனின் அருளையே சக்தியென்று நாம் வழிபடுகிறோம். சக்தியானது பெண் வடிவம் கொண்டது உயிர்களின் நன்மை பொருட்டேயாகும். அந்த அன்னையே பல தலங்களிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவற்றில் சக்தி பீடங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. தட்சனின் யாக குண்டத்தில் வீழ்ந்து உயிர் துறந்த சதிதேவியின் உடலை தோளில் சுமந்த வண்ணம் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார் என்றும்; இதனால் உலகங்களெல்லாம் அழிந்துவிடும் நிலை ஏற்பட, அதைத் தவிர்க்கும் பொருட்டு திருமால் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை வெட்டி வீழ்த்தியதாகவும்; அவை பூவுலகில் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன.

அதன்படி தேவியின் தோள் பகுதி விழுந்த இடமே ரத்தன்பூர் மகாமாயா கோயில். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இது கவுமாரி பீடம் எனவும் அழைக்கப்படுகிறது. மகாமாயா தேவி மகிஷாசுரமர்த்தினி எனவும் வழங்கப்படுகிறாள். மகாபாரதத்தில் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளதாகச் சொல்வர். நான்கு யுகங்களிலும் விளங்கியதால் சதுர்யுகி என்ற பெயரும் உண்டு, என்றும் அழியாதது என்ற சிறப்பு பெற்ற தலம். திரிபுரி வம்ச குலுச்சோரியா மன்னர்கள் ரத்னபூரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்துள்ளனர்.

முன்னர் மணிப்பூர் என்றிருந்த இந்நகரின் பெயரை முதலாம் ரத்தன்தேவ் என்ற மன்னன், தன்பெயரில் ரத்தன்பூர் என்று மாற்றினான். இந்த மன்னனே கி.பி. 1045-ல் இக்கோயிலைக் கட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. ஒருமுறை ரத்தன்தேவ் இரவில் வேட்டைக்குச் செல்லும்போது, மகாமாயா தேவி ஒளிமயமாகக் காட்சி தந்திருக்கிறாள். அதைக்கண்டு மயங்கி விழுந்த மன்னன், விடிந்த பின்னரே தெளிந்தான். அம்மனின் சாந்நித்யம் அங்கிருப்பதை உணர்ந்து கொண்ட அவன் கோயில் அமைத்தான். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். மாயமந்திரங்களுக்கும் பிரசித்தபெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.