Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிவசந்தநாதசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சிவசந்தநாதசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிவசந்தநாதசுவாமி- சிவபரிபூரணம் அம்மாள்
  ஊர்: பாலவநத்தம்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு மூலவருக்கு உருவம் கிடையாது, மூலஸ்தானத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு தான் பூஜைகள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு சிவசந்தநாதசுவாமி- சிவபரிபூரணம் அம்மாள் திருக்கோயில், விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோடு, பாலவநத்தம், தெற்கு பட்டி விருதுநகர் மாவட்டம்  
   
போன்:
   
  +91 8220332778, 9092815126, 9786843377 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் விநாயகர், அன்னபூரணி, நாகர், முருகன், ஆஞ்சநேயர், இருளப்பசாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தொடர்ச்சியாக அருப்புக்கோட்டை வட்டம். மதுரை ரோடு பாலையம்பட்டியில் சீலைக்காரியம்மன் கோயில் சுமார் 100 சதுரடி உள்ள இடத்தில் அமைந்துள்ளது. சீலைக்காரியம்மன் அக்னியால் வந்து மேற்படி இடத்தில் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் அமைந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றும் தலம் இது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது காணிக்கையாக வஸ்திரம், மாலை சாற்றி வணங்குகின்றனர். 
    
  தல வரலாறு:
     
  இக்கோயிலின் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு என பெரியோர்களால் கூறப்படுவதாகும். தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள தெற்குப்பட்டி (தற்போது பாலவநத்தம்) என்ற ஊரில் வியாபார நோக்கில் நடுமண்டல (தமிழகத்தின் நடுப்பகுதியில் வாழும் செட்டியார் இனத்தவர்களை அவ்வாறு அழைப்பதுண்டு) செட்டியார் இனத்தினை சேர்ந்தவர்களும். காசுக்கார செட்டியார் இனத்தவரும் சேர்ந்து பருத்தி வியாபாரத்தினை ஒருபிரிவினரும். ஆபரண தங்க நகை வியாபாரம் மற்றும் தானிய வகைகள் வியாபாரம் செய்து வந்தனர். அருப்புக்கோட்டையிலிருந்து கொல்லிமலை (தற்போது நாமக்கல் மாவட்டம்) பகுதியில் வியாபாரம் செய்து வந்தனர்.

கால்நடையாக அருப்புக்கோட்டையிலிருந்து கொல்லி மலை சென்றபோது கடும் மழை ஏற்பட்டு, வெள்ளம் ஏற்பட்டது. மேற்படி வெள்ளத்தில் நமது முன்னோர்கள் தத்தளித்து ஒதுங்கிய நிலையில் வெள்ளத்தில் நாம் தற்போது குலதெய்வமாக வழிபட்டு வரும் 3 பெட்டிகளும் கரை ஒதுங்கின. மேற்படி பெட்டியினை பார்த்த நம்முன்னோர்கள் பெட்டியினை எடுத்து இரவு முழுவதும் தங்கியிருந்தனர். அப்போது திடீரென முன்னோர்களது கனவில் நமது குலதெய்வமான சர்ப்பம் (பாம்பு) தோன்றி, என்னை வழிபட்டு வந்தால், சகல பாக்கியத்தினையும் கொடுப்பேன் என்றும், என்னை (பெட்டியினை) தரையில் வைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு மறைந்து விட்டது. இக்கனவு அனைவரிடமும் வந்ததால், அனைவரும் ஆச்சரியப்பட்டு, பெட்டியினை மரத்தினை கட்டிவைத்து விட்டு வியாபாரத்திற்காக கொல்லிமலை சென்றனர்.

கொல்லிமலையில் நமது முன்னோர்களிடம் பவளமாமுனிவர் சந்தித்து நடந்ததை அவரே கூறியுள்ளார். மேலும் கொல்லிமலை தீர்த்தத்தை எடுத்து பெட்டியில் தெளித்து வழிபடுமாறும் தெரிவித்துள்ளார். பின்னர் மேற்படி பெட்டியானது அதே மரத்தில் கட்டிவைத்தவாறு இருப்பதைக்கண்டு அதே இடத்தில் கோயிலை கட்ட முடிவெடுத்தனர். அப்போது தற்போதைய பாலவனத்தில் ஐயர் வாழ்ந்த பகுதியாக இருந்ததால், கோயில் கட்ட எதிர்ப்பு ஏற்பட்டது. அன்று இரவே அனைவரது வீட்டிலும் தீப்பிடித்தது. இதனை கண்ட மக்கள் வெகுண்டு கோயிலுக்கு இடவசதி கொடுத்து உதவினர். தற்போதுள்ள இடம் ஊர் மக்களால் தானமாக கொடுக்கப்பட்டதாக வரலாறு. அன்று முதல் செட்டியார் வகையினர் வியாபார நோக்கமாக பல்வேறு பகுதியில் வாழ்ந்தாலும் குல தெய்வமாக இக்கோயிலினை வழிபட்டு வாழ்க்கையில் பல நன்மைகளையும். பல சாதனைகளையும் பெற்று வருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவருக்கு உருவம் கிடையாது, மூலஸ்தானத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு தான் பூஜைகள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.