Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜலநாராயணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஜலநாராயணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜலநாராயணர்
  உற்சவர்: நாராயணர்
  ஊர்: காட்மாண்டு
  மாவட்டம்: நேபாளம்
  மாநிலம்: மற்றவை
 
 திருவிழா:
     
  விஷ்ணு துாக்கத்திற்கு செல்லுதல், எழுப்புதல் என ஹரி சயனி, ஹரி போதினி என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதில் இரண்டாவது விழா கார்த்திகை 11வது நாள் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு நாராயணர் மிதந்து கொண்டிருக்கிறார். இங்கு இவரை ‘புதநீல்கந்தா’ என அழைக்கின்றனர். இதற்கு நீலத்தொண்டை எனப்பொருள்.  
     
திறக்கும் நேரம்:
    
 அதிகாலை 5:00 – மாலை 6:00 மணி 
   
முகவரி:
   
  ஜலநாராயணர் கோயில், காட்மாண்டு, நேபாளம்  
   
    
 பொது தகவல்:
     
  பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவர் பரந்தாமன். இவர் தன் திரு உருவத்தைப் பூவுலக மனிதர்கள் தரிசிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். எனவே அர்ச்சா மூர்த்தியாகப் பூவுலகில் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார். அவற்றுள் பல தலங்களில் சயனக் கோலத்திலும், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.  இதுவே இவர் சயனக்கோலத்தில் தண்ணீரில் மிதந்தபடி காட்சி தந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆவல் உங்களுக்கு இருந்தால் நேபாளத்திற்கு வாருங்கள். அங்கு காட்மாண்டு பள்ளத்தாக்கில், சிவபுரி மலையடிவாரத்தில் ஜலநாராயணராக அருள்புரிகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  வைகுண்ட ஏகாதசி, ஹரி சயனி, ஹரி போதினி திருவிழா 
    
நேர்த்திக்கடன்:
    
  விஷ்ணு துாக்கத்திற்கு செல்லுதல், எழுப்புதல் என ஹரி சயனி, ஹரி போதினி என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதில் இரண்டாவது விழா கார்த்திகை 11வது நாள் கொண்டாடப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  13 மீட்டர் நீளம் கொண்ட குளத்தைச் சுற்றி நான்கு புறமும் கம்பிகள். அதன் வெளியே இருந்து ஆதிசேஷன் மீது சயனம் கொண்டிருக்கும் நாராயணரை தரிசிக்கலாம். தலையில் தங்க வண்ணம் பூசிய கிரீடம். அதனை மறைத்து வெள்ளிக் கிரீடம் வைத்துள்ளனர். இப்படி நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, மாணிக்கங்களை தாங்கியுள்ளார். பக்தர்கள் கொண்டு வரும் புஷ்பங்களை அவரது காலடியில் வைத்து தருகின்றனர்.  
 
     
  தல வரலாறு:
     
  பல ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒன்று இடித்தது. அதை மீறி மீண்டும் முயற்சிக்கவே ரத்தம் பீறிட்டது. பயந்த விவசாயி ஊர்மக்கள் உதவியுடன் பூமியில் இருந்து ஒரு சிலையை எடுத்தார். அவர்தான் நம் ஜலநாராயணர். அப்போது அப்பகுதியை ஆட்சி செய்த விஷ்ணு குப்தர் கோயில் எழுப்பி திருப்பணி செய்தார். இப்படி 1400 ஆண்டு பழமையானது கோயில்.

ஒருசமயம் சிலையில் இருந்து சிறு பகுதி எதிர்பாராமல் உடைந்து விழுந்தது. அதனை ஆய்வு செய்த போது அது சிலிகா அதிகம் கொண்ட கல் என தெரிந்தது. அதாவது எரிமலை கக்கி வெளிவரும் கற்கள் பெரியதாக இருக்கும். ஆனால் எடை இருக்காது. அதனால்தான் இங்கு நாராயணர் மிதந்து கொண்டிருக்கிறார். இங்கு இவரை ‘புதநீல்கந்தா’ என அழைக்கின்றனர். இதற்கு நீலத்தொண்டை எனப்பொருள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு நாராயணர் மிதந்து கொண்டிருக்கிறார்
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar