Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கார்த்திகேயா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கார்த்திகேயா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முருகன்
  உற்சவர்: முருகன்
  அம்மன்/தாயார்: திரிபுரசுந்தரி அம்மன்
  ஊர்: நொய்டா
  மாநிலம்: உத்திர பிரதேசம்
 
பாடியவர்கள்:
     
  காலை 7 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 .30 மணி முதல் 8 .30 மணி வரை திறந்திருக்கும்.
 
     
 திருவிழா:
     
  சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ராம நவமி  
     
 தல சிறப்பு:
     
  ஒரே கல்லில் வடிவமைத்துள்ள 4.5 அடி உயர முருகனின் சிலை உத்தர பிரதேசத்தில் இக்கோவிலில் தான் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 .30 மணி முதல் 8 .30 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு கார்த்திகேயா கோயில், செக்டார் 62 நொய்டா, உத்தர பிரதேசம்  
   
போன்:
   
  +91 98111 61370, 79820 48559, 96509 09386, 98101 24320, 98711 95501  
    
 பொது தகவல்:
     
 
விக்கிரகங்கள்: ஸ்ரீ கார்த்திகேயர் (மூலவர்), ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ராமர் பரிவாரம், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன், நவகிரகங்கள்,  ஸ்ரீ சாந்தஆஞ்சநேயர் மற்றும் பஞ்சலோகத்தில் ஸ்ரீ மஹா பெரியவா. 


 
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள முருகனை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  குழு பாராயணங்கள், பாராயணங்கள் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறது. ஐந்தாம் ஆண்டாக முருக பாராயணம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சத்ரு சம்ஹார, தன்வந்திரி, அவந்தி தேவி, சண்டி ஹோமங்கள் மனித குலத்தின் நலனுக்காககோவில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.  
    
 தலபெருமை:
     
  கோயில் வளாகத்தில், பல நோக்கங்களுக்கான அரங்குகள், கலாச்சாரம் மற்றும் மத நிகழ்ச்சிகள், அடித்தளத்தில்  மற்றவை முதல் தளத்தில் உள்ளன.  ஒவ்வொரு அரங்குகளில்  250 பேர் அமரும் வசதியும், அலுவலக, பணியாளர்கள் குடியிருப்புகள், மற்றும் ஸ்டோர் உள்ளன. இரண்டாவது தளம் உள்ளது.  ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம மண்டலியின் மகளிர் பிரிவுடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர், கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி மற்றும் ஆகியவற்றின் வாராந்திர குழு பாராயணங்கள் தடையின்றி நடத்தி வருகின்றனர். அதே போல் மாதந்தோறும் அனுஷ நட்சத்திர பூஜை பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
 
     
  தல வரலாறு:
     
  கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அதன்படி நொய்டா ஆணையத்திடம் நிலம் கேட்டு, கோவில் கட்ட, வழிபாட்டிற்காக, 1000 சதுர மீட்டர் நிலம் செக்டார் 62 நொய்டா (தில்லிக்கு மிக அருகில்) ஒதுக்கப்பட்டது.  முதல் கட்ட கட்டுமானப் பணிகள்  22 ஏப்ரல், 2018 அன்று தொடங்கின. நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயிலில் (நூதன ஆலய) மஹா கும்பாபிஷேகம் 21 ஆகஸ்ட் 2022 அன்று  நடைபெற்றது. கும்பகோணத்தை சேர்ந்த பிரம்மஸ்ரீ சேனாபதி மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் அடங்கிய குழுவினருடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar