Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலட்சுமி
  ஊர்: பள்ளிப்புரம்
  மாவட்டம்: ஆலப்புழா
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் 12 நாள் "களபபூஜை', தை மகரசங்கராந்தி, தை புனர்பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை தின விழா, மாசி மகாசிவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தான் மகாலட்சுமி கேரள மாநிலத்திலேயே தனிகோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கும். இத்தலத்தின் நுழைவு வாயிலில் ஒன்பது கிரகங்களுக்குமான அதிதேவதைகள் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பாகும்.மகாலட்சுமியின் வாகனமான முதலையை கல்லால் வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோவில், பள்ளிப்புரம் - 678 006, ஆலப்புழை மாவட்டம் , கேரளா மாநிலம்.  
   
போன்:
   
  +91 478-255 2805; 094464 93183 
    
 பொது தகவல்:
     
  கோயில் சுற்றுப்பகுதியில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி,க்ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை,குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் நாராயணனையும், மகாலட்சுமியையும் தரிசித்தால் பலன் கிட்டும். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

ஆயிரம் வருடம் பழமையான இங்கு அம்மன் "கடவில் ஸ்ரீ மகாலட்சுமி' என அழைக்கப்படுகிறாள். இவள் அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக முன் கைகளில் நெல்கதிர், கிளியும், பின் கைகளில் சங்கு சக்கரமும் வைத்து அருள்பாலிக் கிறாள். கேரளாவில் மகாலட் சுமிக்கு என அமைந்திருக்கும் தனி  கோயில் இதுதான். அம்மன் கிழக்கு திசையில் சூரிய நாராயணனை பார்த்துள்ளாள்.  சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்து இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி விட்டு, முகம் கை கால்களை கழுவி மகாலட்சுமியை தரிசித்தால் நாராயணனையும் சேர்த்து தம்பதி சமேதராக தரிசித்த பலன் கிட்டும். திருமணத்தடையும் நீங்கும் என்பது நம்பிக்கை.


 
     
  தல வரலாறு:
     
 

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்த மக்கள் பிழைப்புக்காக சேத்தலா பகுதிக்கு வருகிறார்கள். இவர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் மகாலட்சுமிக்கென தனிகோயில் கட்டி வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் கேரளா வந்தவுடன் இங்கும் மகாலட்சுமியை தொடர்ந்து வழிபட விரும்புகிறார்கள்.இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மகாலட்சுமி இங்கு அருள்பாலிக்கிறாள். இவள் காஞ்சிபுரத்திலிருந்து முதலை மூலமாக இத்தலத்திற்கு வந்துள்ளாள் என புராணம் கூறுகிறது.மகாலட்சுமி வந்து இறங்கிய இடத்தை இன்றும் பராமரித்து வருகிறார்கள். இந்த இடம் மிகப்பெரும் ஏரிக்கு அருகில் உள்ளது. ஏரியில் உள்ள நீர் உப்பாக இருக்கும். ஆனால் மகாலட்சுமி வந்து இறங்கிய இடம் மட்டும் சுவையான குடிநீராக உள்ளது.ஆரம்ப காலத்தில் இந்த முதலைக்கு உணவு கொடுத்து கோயில் அருகிலேயே வழிபட்டு வந்தார்கள். அதன் பின் கல்லால் முதலையின் சிலையை வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.


 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar