Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திரவுபதி (பாஞ்சாலி )
  தல விருட்சம்: வன்னி, வேம்பு
  தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி, முருகனுக்கு தனியாக பால்சுனை
  ஊர்: ஐவர்மலை
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை.  
     
 தல சிறப்பு:
     
  ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில், ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை, பழநி. திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4545 - 260417. 
    
 பொது தகவல்:
     
 

இத்தலவிநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


இங்கு வாழ்ந்த சித்தர்: துவாபரயுகத்தில் போகர் கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் இங்கு வந்து தங்கி தியானம் செய்து முக்தியடைந்து உள்ளனர்.


பழனியைப்போலவே இங்கும் இடும்பனுக்கென தனி சன்னதி உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
  பிரார்த்தனை யோக, தியானம், தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்லலாம் 
    
நேர்த்திக்கடன்:
    
  அமாவாசை, கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் இந்த குழந்தை வேலப்பரை வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
 

பழனி மலை முருகனை போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார். எனவே இந்த ஐவர்மலையை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.


ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன.


ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.


இந்த மலைக்கு வந்து வணங்கினால் பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள். எப்படி என்றால் யோக நிலையில் துரியா என்பது மனம். இந்த துரியம் உடலை விட்டு உச்சந்தலை வழியாக வெளியேறுவதே துரியாதிதம் ஆகும். இதன் அடிப்படையில் தான் இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ளார்.


இப்படி உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில் மலையிலேயே நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம், நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).நெருப்பு, காற்று-இங்கு ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.


ஆகாயம்-மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம். இப்படி பஞ்ச பூதங்களும் ஒரு சேர இங்கு சங்கமிப்பதால் ஆடி அமாவாசையில் இங்கு வந்து வழிபட்டால் பஞ்சபூத தலங்களுக்கும் ஒன்றாக சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.


சுமார் 150 வருடங்களுக்கு முன் நாராயணசாமி பரதேசி என்பவர் இந்த மலைக்கு வந்து பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் இங்கு தங்கியதை அறிந்து அந்த பாஞ்சாலிக்கு விக்ரகத்துடன் கூடிய கோயில் ஒன்றை நிறுவுகிறார். இவரது முக்திக்கு பின் சீடர் பத்மநாபா சுவாமிகளும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள்.


இவர்கள் வழியில் வந்த பெரியசாமி என்பவர் இங்கேயே தங்கி பலருக்கு தியானம் , யோகா, போன்றவற்றை கற்றுத்தந்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இதில் பெரியசாமிக்கு இங்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. இவர்களின் சீடர் தான் பழனி சாமி சுவாமிகள். இவரும் இவரது சீடர் தாண்டேஸ்வரன் என்பவரும்தான் இப்போது இம்மலையில் யோகா,தியானம் ஆகியவற்றை சொல்லி தருகிறார்கள்.


இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நவகிரகங்கள் நீள் வட்ட பாதையில் தான் சுற்றுகின்றன என்பதற்கேற்ப இங்குள்ள நவகிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.


 
     
  தல வரலாறு:
     
 

பஞ்சபாண்டவர்கள் தங்களின் வன வாசத்தின் போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால் தான் இந்த மலை ஐவர் மலை எனஅழைக்கப்படுகிறது. மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷானத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.


இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.


இந்த போகர் புராண காலத்தில் நந்தியாக இருந்தவர். இதற்கான ஆதாரம் போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு, ஆகிய நூல்களில் உள்ளதாக இங்குள்ள தாண்டேஸ்வரன் என்பவர் தெரிவித்தார். அதே போல் இம்மலையிலுள்ளகுழந்தை வேலப்பர் கோயிலுக்கும் தனி வரலாறு உண்டு.


பல வருடங்களுக்கு முன் நாராயண சுவாமியின் சீடர்களில் ஒருவரான முருகானந்தம் இந்த மலையில் வசித்த போது லட்சுமணன் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது.


இந்த குஷ்ட நோய் தீர ஐவர் மலையில் குழந்தை வேலப்பர் கோயில் கட்டி வழிபட்டால் குஷ்ட நோய் தீரும் என முருகானந்தம் சுவாமி கூற அதே போல் லட்சுமணனும் கோயில் கட்டி வழிபடுகிறார். இதனால் இவருக்கிருந்த குஷ்ட நோய் போய்விட்டது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். இங்கு உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில், ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar