Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலதண்டாயுதபாணி, ஜலகண்டேசவரர்
  அம்மன்/தாயார்: ஜலகண்டீஸ்வரி
  தல விருட்சம்: செண்பக மரம்
  தீர்த்தம்: நீலநாரயணதீர்த்தம்
  புராண பெயர்: மான்குன்றம்
  ஊர்: எல்க் மலை
  மாவட்டம்: நீலகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருத்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். தைப்பூசம் கொடியேற்றத்துடன் 10 நாள் விழாவாகவும், பங்குனி உத்திரம் தேர்த்திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. மலைப்பிரதேசத்தில் ஏற்ற இறக்கத்தில் தேரினை பக்தர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தேரை டிராக்டரில் பூட்டி தேரோட்டம் நடத்தி வருகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  நாற்பது அடி உயரமுள்ள முருகன் சிலையை கோயிலின் இடதுபுறம் காணலாம். இந்தியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இதன் அமைப்பு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைப் போலவே உள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 5 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை - 643 001 நீலகிரி மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  படியின் முடிவில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. அடுத்ததாக கொடிமரம், அர்த்தமண்டபம் கடந்து பாறையை ஒட்டி கருவறை அமைந்துள்ளது. கருவறையில் பாலதண்டாயுதபாணி தலையில் அக்கமாலையும் இடக்கையில் தண்டமும் ஏந்தியுள்ளார். முருகனுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதைப் போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படுகிறது. அருகே நாராயண தீர்த்தம் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்ட புஜ துர்க்கை, ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரி தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால்செவ்வாய் தோஷம் நீங்கி, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம்,  ஆகியவை கைகூடுகின்றன. மேலும் இத்தலம் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும் அழகான இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுப்புற சூழ் நிலையாலும் தூய்மையான காற்றாலும் இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் மூச்சு திணறல், ரத்தகொதிப்பு, கை, கால் மூட்டு வலி போன்ற உடல் ரீதியான பிரச்னைகளும் குணமடைவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
 

நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோயில். மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு. முருகன் உள்ள தலத்தில் பெருமாள் எழுந்தருளியிருப்பது விஷேசம். 7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோயில் இது.


பொதுவாக கோயில்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது மரபு. ஆனால் பல்வேறு காரணங்களினால் இங்கு நாற்பது ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இந்நிலையில் பக்தர்களின் தீவிர முயற்சியினால் கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு வெகு விமர்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.


குன்றின்மீதுள்ள கோயிலே அடைய, முன்பு சரிவான மேட்டுச் சாலையில் ஏறிச் செல்ல வேண்டும். முருகனை படியேறிச் சென்று தரிசிப்பது சிறப்பன்றோ! அதனால் தற்போது 108 படிகளுடன் 5 மண்டபங்களையும் அமைத்துள்ளனர்.


நாராயண தீர்த்தத்திலிருந்து எடுக்கப்படும் நீர்தான் முருகனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

அக்காலத்தில் இப்பகுதியில் இணைபிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர் இருவர். பழநி முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் கொண்ட அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு பழநிக்கு பாதயாத்திரையாகச் சென்று முருகனை தரிசித்து வருவது வழக்கம்.


ஒரு சமயம் உடல்நலக் குறைவால் தைப்பூசத்தன்று அவர்களால் பழநிக்குச் செல்ல முடியவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்தினர். அன்றிரவு முருகப் பெருமான் அவர்களின் கனவில் தோன்றி அருகிலுள்ள குன்றில் தான் உறைவதாகவும், அங்கேயே கோயில் அமைத்து தன்னை வழிபடுமாறும் கூறினார்.


கனவில் முருகப்பெருமான் குறிப்பிட்ட இடம் எல்க் எனும் ஒருவகை மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்த குன்றிப் பகுதி, அதனால் எல்க் ஹில்ஸ் எனப் பெயர் பெற்று விளங்கும் இப்பகுதியில் இருவரின் உதவியோடு தற்போதுள்ள கோயில் உருவாகியதாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருமேனி பழநி முருகன் சிலையைப் போன்றே உள்ளது. இந்த முருகனின் சிறப்புகளை அறிந்த நிலம்பூர் மகாராஜா, கோயிலுக்குத் தேவையான நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அமைந்த முதல் முருகன் கோயில் என்ற பெருமையும் இதற்குண்டு. அங்குள்ள பழங்குடியினரின் குலதெய்வமாகவும் இவர் விளங்குகின்றார்.


படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.