Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நல்லதங்காள்
  ஊர்: வத்திராயிருப்பு
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  நல்லதங்காளுக்கு அமைந்த ஒரே கோயில்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம். 
   
முகவரி:
   
  அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  நீர் வளமும் நில வளமும் வற்றாமல் என்றும் செழிப்பாக உள்ள ஊர் வத்திராயிருப்பு. இவ்வூர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  பிள்ளைப்பேறு, பிள்ளைகள் நலமுடம் வாழ தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் சன்னிதானத்திலும் கட்டி வணங்குகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  நெல், வாழை, கரும்பு, தென்னை என்றும் பயிரிடப்பட்டு குட்டி மலையாளம் என்று பெயர் பெற்றுள்ளது. இவ்வூரின் செழிப்புக்கு காரணம் அர்ச்சுனா நதியாகும்.  
     
  தல வரலாறு:
     
  வத்திராயிருப்பைச் சேர்ந்தவள் நல்ல தங்காள். இவளுக்கு நல்லதம்பி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. பெரும் விவசாயக் குடும்பத்தில் பண்பாடு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காளை மதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஏழு குழந்தைகளுக்கு தாயானாள் நல்ல தங்காள். இந்நிலையில் மதுரையை பஞ்சம் வாட்டியது. வறுமையை போக்க தன் ஏழு பிள்ளைகளுடன் அண்ணன் நல்லதம்பியை நாடி வத்திராயிருப்புக்கு வந்தாள். அப்போது அண்ணன் வீட்டிலில்லை. அண்ணி அவளை கண்டு கொள்ளவில்லை. பசியால் வந்த நல்ல தங்காளையும், அவள் குழந்தையையும் ஆதரிக்காமல் ஓட்டை மண்பானையையும், பச்சை விறகையும், பயன்படுத்த முடியாத கோப்பையையும் கொடுத்து உணவாக்கி உண்ணச் சொன்னாள்.

பத்தினி தெய்வத்தன்மை படைத்த நல்ல தங்காள் பார்த்த உடனே பச்சை விறகு தீப்பற்றி எரிந்தது. உணவு சமைத்து தானும் பிள்ளைகளும் உண்டு அரைப்பசியை தடுத்தனர். அண்ணன் வருவான் என்று எதிர் பார்த்தாள். நாட்கள் சில கடந்தன. பசி வாட்டியது. பிள்ளைகள் வாடின. அண்ணன் தன் நிலையைப் பார்த்து துடிப்பான், அண்ணியின் இரக்கமற்ற தன்மையைக் கேட்டால் கொதிப்பான், எனவே தானும், குழந்தைகளும், மாய்வதே சிறப்பு என்று நினைத்து அவசர முடிவெடுத்து பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளையும் தூக்கி எறிந்து தானும் குதித்து மூழ்கினாள்.

இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான். பத்தினியான நல்லதங்காள் தெய்வ பக்தி கொண்டவள். எனவே இறைவனும் இறைவியும் அங்கு தோன்றி அவர்களை உயிர்ப்பித்து மீண்டும் இப்புவியில் வாழ் என்றார்கள். ஆனால் மாண்டவரெல்லாம் மீண்டும் வந்தால் இப்புவியில் இடம் இருக்காது. அந்த தவறுக்கு நான் துணையாக இருக்க மாட்டேன். எங்களை உன் திருவடியில் சேர்ப்பாயாக என்று வேண்டினாள். அதற்குரிய காலம் விரைவில் வரும். அதுவரை இங்கே அம்பாளாக இருந்து இப்புவிமக்களுக்கு அருள் பாலிப்பாயாக என்று கூறி மறைந்தனர். அன்று முதல் இங்கே நல்ல தங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள். நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி வணங்குகின்றனர் மக்கள். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்துகொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம். நல்லோர் தெய்வமாவர் என்ற ஆன்மிக தத்துவத்தின் அடிப்படையில் நல்லதங்காள், நல்லதம்பி தெய்வமாகவும் அவர்கள் வாழ்ந்த அரண்மனை கோயிலாகவும் போற்றப்படுகிறது. தன்னால் அண்ணனுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என தங்கையும், தங்கைக்கு கிடைக்காத வாழ்க்கை, தனக்கு தேவையில்லை என அண்ணனும் உயிரை மாய்த்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, ஈடில்லாத ஓர் உணர்வுப்பூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது நல்லதங்காள் கதை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நல்லதங்காளுக்கு அமைந்த ஒரே கோயில்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.