Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலசுப்ரமணிய சுவாமி
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: நந்தவனக் கிணறு
  புராண பெயர்: புகழிமலை (ஆறுநாட்டார் மலை )
  ஊர்: வேலாயுதம்பாளையம்
  மாவட்டம்: கரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

-
 
     
 திருவிழா:
     
  தைப்பூசம் - 15 நாட்கள் - லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சூரசம்காரம் - 7 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர். கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை மற்றும் மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்  
     
 தல சிறப்பு:
     
  அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம். விஷ்ணு துர்க்கை : இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்கு போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சஷ்டி விரதம் அனுஷ்டித்தால் குழந்தை வரம் கிடைக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம்-639117 கரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

இது 360 படிகள் கொண்ட மலைக்கோயில்.


 
     
 
பிரார்த்தனை
    
 

இங்குள்ள முருகனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம், உடல் நலக் குறைவு நீங்குதல் ஆகியவை நிறைவேறுகின்றன. ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  அபிஷேகம், கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல். சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை செய்யலாம். 
    
 தலபெருமை:
     
 

360 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மனதுக்கு அமைதி தரும் முருகன் தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன . தொல் பொருள் ஆராய்ச்சி துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.


 
     
  தல வரலாறு:
     
 

இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.