Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்)
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: சோலைக்கவுண்டன்பட்டி
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி மாதம் நவராத்திரி ஒன்பது நாளும் பெருமாள் புறப்பாடு உண்டு. சித்திரை வருடப்பிறப்பு, ராமநவமி, கோகுலாஷ்டமி, திருக்கார்த்திகை, மாதம் தோறும் ஏகாதசி, மார்கழி சிறப்பு பூஜை என பெருமாளுக்குரிய அனைத்து விசேஷ பூஜைகளும் இங்குண்டு.  
     
 தல சிறப்பு:
     
  நவகிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி - 626 002 விருதுநகர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4562 - 394 299, 324 299, 94889 62220 
    
 பொது தகவல்:
     
  மூலவரைச் சுற்றிலும் யோகநரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், வேதாந்ததேசிகன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் வீற்றிருக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பகுதியில் விநாயகர், லட்சுமி, துர்கை, லட்சுமி நரசிம்மரும் உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை உள்ளவர்கள், வேலை வாயப்பு வேண்டுபவர்கள், பதவியில் உயர்வு பெற விரும்புபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பலன் நிச்சயம்.

அத்துடன் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதால் உடனடி பலன் கிடைக்கிறது என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  மூலவர் திருவேங்கடமுடையான் என்ற சீனிவாசப்பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான். எனவே ராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இத்தலம் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
 

என்ன ராசி, என்ன நட்சத்திரம் என தெரியாவிட்டாலும் விருதுநகரிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் அதன் பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்து விடும் என கோயில் தல வரலாறு கூறுகிறது.இப்படி அந்தந்த ராசி, நட்சத்திரத்திற்குரிய பலனை பெருமாள் அள்ளிவழங்குவதால் இவரை "நம்பெருமாள்' என் இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.



 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நவகிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சிறப்பம்சமே ராசிக்கட்டமும், ராசிக்கு அதிபதியும் இருப்பது தான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar