Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லட்சுமி நரசிங்கப்பெருமாள்
  உற்சவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: மகாலட்சுமி
  தல விருட்சம்: மருதமரம், நெல்லி
  தீர்த்தம்: ராய தீர்த்தம்
  ஊர்: திண்டிவனம்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசியில் பத்து நாள் பிரமோற்ஸவம், பவுர்ணமியில் கருட சேவை. திருவோணத்தன்று தீர்த்தவாரி.  
     
 தல சிறப்பு:
     
  இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்-604 001 விழுப்புரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4147-225 077, 99432 40662. 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். பள்ளி கொண்ட ரங்கநாதர், கோதண்ட ராமர், வேணு கோபால், ஆண்டாள், சக்கரத் தாழ்வார், ஆஞ்சநேயர், ஆகியோருக்கும் சன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இங்கு பரிகார பூஜை செய்தும், திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சங்கு சக்கர ஆஞ்சநேயர்: முன்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் "திந்திருணி' என்பது புளியமரத்தை குறிக்கும். "திந்திருணி வனம்' என்பது மருவியே திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர் களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதன்படிஅனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின்வேள்வி தடையின்றி நடைபெற அருள்பாலித் தார்.இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
 
     
  தல வரலாறு:
     
  இரணியன் என்ற அசுரனின் மகன் பிரகலாதன். அசுரகுலத்தில் பிறந்தாலும், நாõராயணனின் பக்தனாக இருந்தான். அந்நாட்டில், இரணியனையே மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. அதை மகனே மீறியதால், அவனைத் துன்பம் செய்தான் இரணியன். நாராயண பக்தி செய்ததற்காக, பெற்ற பிள்ளையையே கொடுமை செய்ததைக் கண்ட திருமால் அவனை அழிப்பதற்காக மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். "நரன்' என்றால் "மனிதன்'. "சிம்மம்' என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத் தினால் உலகம்நடுங்கியது. இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட் சுமியை வேண்டினார். தாயார் பெருமாளிடம் சினம் தணியும் வகையில் ஆசுவாசப் படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது. இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. லட்சுமிக்கு இக்கோயிலில் முக்கியத்துவம் என்பதால் "நரசிம்ம லட்சுமி' கோயில் என்று இதற்கு பெயர் வந்து விட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar