அருள்மிகு பாம்பன் சுவாமிகள் மடம் |
திருவான்மியூர், சென்னை |
+91 2491 1866 | |
|
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் |
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
மடிப்பாக்கம்
சென்னை |
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம். |
1978-ஆம் வருடம், அப்போதைய சபரிமலையின் பிரதான தந்திரி நீலகண்டரு இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கோயில் சார்பில் வருடந்தோறும் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களும் மருத்துவ முகாம்களும் நடைபெறுகின்றன. |
அருள்மிகு யாக்ஞவல்கியர் சபா |
அருள்மிகு யாக்ஞவல்கியர் சபா
ஜி.எஸ்.டி சாலை
சென்னை |
சென்னையிலிருந்து ஜி.எஸ்.டி சாலையில் பல்லாவரத்துக்கு அருகே இடதுபுறத்தில் செல்லும் சுரங்கப்பாலம் வழியாக செல்லலாம். தற்போது வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையிலும் வலதுபுறம் திரும்பும் சாலை வழியாகவும் செல்லலாம். |
ஆலயத்தின் நுழைவாயிலிலேயே வலப்புறத்தில் யோக கணபதி எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்துக்கள் காயத்ரி தேவி, மைத்ரேயி, காத்யாயினி உடன் யாக்ஞவல்கியர், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் சூரிய நாராயணர் ஆகியோருக்குச் சன்னதிகள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களுள் நடுநாயகமாக விளங்குபவர் சூரிய பகவான். அவருக்குத் தனிச் சன்னதி அமைந்திருப்பதும். அவரிடம் வேதம் பயின்று சுக்ல யஜுர் வேதத்தை அருளிய யாக்ஞவல்கியர் தனது தேவியர்களுடன் மத்தியில் வீற்றிருப்பதும், அவரை சூரிய பகவானிடம் கற்க வழி செய்த காயத்ரிதேவிக்குத் தனியொரு சன்னிதி அமைந்திருப்பதும் இங்குள்ள சிறப்பம்சங்கள். |
அருள்மிகு சிவ-விஷ்ணு திருக்கோயில் |
அருள்மிகு சிவ-விஷ்ணு திருக்கோயில்
தி. நகர்
சென்னை |
044 2444601 | சென்னை தி.நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. |
- |
அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் |
அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில்
செட்டிபுண்ணியம்
சென்னை 603 204 |
044- 27400836 | செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியிலுள்ள சிங்கபெருமாள் கோயிலிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. |
கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இக்கோயில் காலை 7.30 முதல் 12 மணி வரையும் மாலை 4.30 முதல் 8.00 மணி வரையும் திறந்திருக்கும். |
அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயில் |
அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயில்
கூடுவாஞ்சேரி
சென்னை |
கூடுவாஞ்சேரி மின்வாரிய பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் யோக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. |
யோக நிஷ்டையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்கிறார் ஆஞ்சநேயர். இவர் த்ரிநேத்ரம் சடையுடன் சிவ அம்சமாகவும், நாகர் குடை பிடிக்க சக்தி அம்சமாகவும், சங்கு சக்கரம் தரித்து விஷ்ணு அம்சமாகவும், நவக்கிரகங்களை தன்னுள் அடக்கி நவக்கிரக ஆஞ்சநேயராகவும் வீற்றிருக்கிறார். அதனாலேயே இவர் த்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். |
|
|