அருள்மிகு ரங்கநாதர் ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிக ரங்கநாதர் ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில்,
சோளப்பாடி மேட்டூர் அணை
அருகில் சேலம் மாவட்டம் 636401. |
மேட்டூர் அணை அருகில் உள்ளது. |
காவேரிபுரம், சோளப்பாடி மற்றும் கோட்டை என்கிற 3 ஊர்களைச் சேர்ந்த கோயில்கள் மேட்டூர் அணையின் நிர்மாணத்தின் போது அழிந்தது. இம்மூர்த்தங்கள் அனைத்தும் சேர்த்து ஒரே கோயிலில் (ஜலகண்டேஸ்வரர் ரங்கநாதர் ஆகிய சிற்பங்கள்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ரங்கநாதர் ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சயன திருக்கோலம். |
அருள்மிகு பாண்டுரங்கநாதசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பாண்டுரங்கநாதசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்,
செவ்வாய்பேட்டை,
சேலம் 636002. |
+91 9442261681. | சென்னையிலிருந்து 334 கிமீ தொலைவில் உள்ள இருப்புபாதை நிலையம். நகரத்திலேயே சின்னத் திருப்பதி ஆலயத்தில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் அருள் பாலிக்கிறார். சேலத்திற்கு அருகே அயோத்தியா பட்டணம் என்கிற இடத்தில் மிகத் தொன்மை வாய்ந்த கோதண்டராம ஸ்வாமி திருக்கோயிலும் உள்ளது. |
சேலம் நகரத்தில் உள்ள புராதன கோயில். 110 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரதி வெள்ளிக்கிழமை புறப்பாடு உள்ளது. மார்கழி, புரட்டாசி விசேஷம் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் உள்ளது. பிரதி சனிக்கிழமை துக்காராம் சன்னிதி அருகே நாம சங்கீர்த்தனம் உள்ளது. பாண்டுரங்கநாதசுவாமி ருக்மணி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுகமண்டலம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை |
அருள்மிகு சீதா ராம அனுமத் சமேத ராமர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சீதா ராம அனுமத் சமேத ராமர் தேவஸ்தானம் திருக்கோயில்,
நாகேயநல்லூர்,
சேலம் மாவட்டம் 621231. |
+91 9962513213, 9940321141, 9444742975. | சேலம்-நாமக்கல்-காட்டுப்புத்தூர் பாதையில் உள்ளது. முசிறியிலிருந்து-தொட்டியம் வழியாக செல்லும் திருச்சி காட்டுப்புத்தூர் சாலைப்பேருந்துகளும் செல்லும். நாமக்கல்லிலிருந்து காட்டுப்புத்தூருக்கு தடம் எண் 15-பி மற்றும் 15-டி செல்கிறது. |
கேட்டவரம்பாளையம் தலத்தில் எவ்வாறு ஓர் நூற்றாண்டாக அகண்ட திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறதோ இத்தலத்திலும் சுமார் 86 ஆண்டுகளாக அவ்வாறே பாகவதர்களால் நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. இராம பாணத்தைவிட இராம நாமத்திற்கு பலம் அதிகம் என புராணம் மூலம் அறிவோம். இத்தலத்து மூர்த்தங்கள் பத்ராசல ராமதாஸரால் ஆராதிக்கப்பட்டவையாகும். கஷ்ட நிவர்த்தியினையும் தோஷங்களையும் நீக்கக் கூடிய பெருமாள் இவர். பரமாச்சாரியாரின் ஆசி பெற்ற நித்ய அக்னிஹோத்ரி அனந்தநாராயண வாஜபேயாஜியால் போற்றப்பட்ட இராமர் இவர். ஒவ்வோர் ஆண்டும் ராமநவமி விமர்சையாக நடைபெறுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட முத்துவீர பூபாலன் என்னும் குறுநிலமன்னனின் அமைச்சரான நாகையா என்பவர் சைலம் ஜோதிர்லிங்கத்திற்கு இணையான மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பா (மல்லி மலர், அதன் மேல் மொய்க்கும் வண்டு பிரமரம் என்கிற பொருள்பட) பிரதிஷ்டை செய்த கோயில். பெரும் சிவத்தொண்டு புரிந்து சிருங்கேரி நரசிம்ம பாரதியிடம் தீக்ஷை பெற்ற பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சமாதியும் அருகே உள்ளது. தொன்மை மிக்க இப்பகுதியில் இப்போது சிறப்பாக நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறுது. சீதா நாம அனுமத் சமேத ராமர் மற்றும் பிரமராம்பிகா உடனுறை மல்லிகார்ஜுனர். |
அருள்மிகு காவேட்டி அரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு காவேட்டி அரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில்,
கோனாகாப்பாடி,
கே.ஆர். தோப்பூர்,
ஓமலூர் வட்டம் சேலம் மாவட்டம்.
|
சேலம் சந்திப்பிலிருந்து தாரமங்கலம் மேற்குப் பாதையில் 7 கிமீ தொலைவிலும் தாரமங்கலத்திலிருந்து கிழக்கே 3 கிமீ தொலைவிலும் உள்ளது. |
ஆதிசேஷன் சர்ப்பமலையாக அரங்கனைத் தாங்கி நிற்பதாக ஐதீகம் சரபங்கர் ஆசிரமத்தின் வழியாக வரும் காவேரியின் உப நதியாகிய சரபங்க நதியின் கரையில் 250 அடி உயரமுள்ளது. இந்த சர்ப்பசிரகம் என்னும் சர்ப்பசிகராலயம். சர்ப்பம் படுத்திருப்பது போன்ற அமைப்புடன் ஆதிசேஷன் தென் திசை நோக்கி ஆடுவது போன்றும், தன் நாம ரேகைகளைக் காட்டியுள்ள தோற்றம் தென் திசையிலிருந்து வரும் எமதூதர்களிடமிருந்து காப்பேன் என அரங்கன் அபயமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 100 அடி நீளமுள்ள 3 வெண்கோடுகள் ஒன்றொக்கொன்று 50 அடி இடைவெளியில் உள்ளது. ராம மற்றும் லக்ஷ்மண தீர்த்தம் தெற்கிலும் வடக்கிலும் உள்ளன. சித்ரா பவுர்ணமி, வசந்தோற்சவம், ராம நவமி, ஜெயந்தி மற்றும் நவராத்திரி உற்சவங்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி 5 சனிக்கிழமைகளும் விசேஷம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை |
அருள்மிகு சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கடேசர் தேவஸ்தானம் திருக்கோயில்,
காருவள்ளி 636319,
ஓமலூர் வட்டம்,
சேலம் மாவட்டம்.
|
+91 4290-246344. | சேலம் தர்மபுரி சாலையில் பெங்களூர் ரயில் பாதையில் ஓமலூருக்கு அடுத்த இரண்டாவது ரயில் நிலையம் காருவள்ளி, சேலத்திலிருந்து சுமார் 25 கிமீ. சின்னத் திருப்பதி என்றால் தெரியும். சேலம் ஓமலூர் வழியாக மூக்கனூர், வெள்ளாறு போகும் பேருந்து மார்க்கத்தில் உள்ள ஊர். மரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையில் கோயில் சுமார் 300 படிகள் ஏறி மலையுச்சியினை அடையலாம். |
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். மலையடிவாரத்தில் மைசூர் மன்னரால் வெட்டப்பட்ட பாவம் போக்கும் தெப்பக்குளம் உள்ளது. ஆதிசேஷன் மற்றும் வாயுவுக்கு இடையே நடந்த சண்டையில் இரண்டாகப் பிளந்த மேரு மலையின் இரு துண்டுகளே இந்தக் குன்றும் திருப்பதியுமாகும் எனப் புராணம் கூறுகிறது. திப்புசுல்தான் காலத்தில் கோயில் பூட்டப்பட்டு பூஜைகள் நின்று வறட்சி ஏற்பட்டது. அப்போது ஓமலூரை ஆண்டு வந்த பாளையக்காரர் வேண்டிக்கொள்ள திருமலைக்கோடி கன்னிகாதான தாத்தாச்சாரியார் சரபங்க நதிக்கரையில் வருண ஜபம் செய்ய மழை பொழிந்தது. அவ்வாறு நன்மை செய்த அந்த அந்தணருக்கு வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றே தாத்தையங்கார்பேட்டை என்பதாகும் பின்னர் அவர்கள் பரம்பரையினரால் இக்கோயில் மீண்டும் எழுச்சி பெற்ற திருவாராதனைகள் நடந்தன. வேங்கடம் என்கிற சொல்லுக்கு வேம்-பாவம், கடம்-எரித்தல் என்றும் பொருள்பட திருப்பதிக்கு இப்பெயர் பிரமனின் விருப்பத்தினால் பெருமாள் ஏற்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. பெருமாள் திருக்கல்யாணமும் இத்தலத்தில் நடைபெற பிரமனும் பிரம்மோற்சவம் நிகழ்த்தியதாகவும் புராணம். இன்றும் புரட்டாசி சுக்ல பக்ஷத்தில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. பாண்டிய மன்னன் இக்கோயிலைக் கட்டினான். மூல விக்ரகத்தில் பெருமாளின் மார்பில் லக்ஷ்மி அமைய இரு புறமும் ஸ்ரீதேவி பூதேவி காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான் சகலவித நோய்களைப் போக்கும் மூலிகைகள் நிறைந்த மலை கலியுகம் 5080ல் நிறுவப்படும் என்றும் புராணங்கள் இத்தலத்தைக் குறிப்பிடுகின்றன. மூர்ச்சையான ஆவிலிப்பிள்ளை என்பவரின் உயிரைக் காத்து, கோயில் தேரை வழக்கமாக இழுக்கும் நாகநாத ஐயர் என்பவர் வராததால் தேர் நகராது நின்றது. சுவாமியின் கீழ் மறைந்திருந்த நவரத்தினங்களைத் திருட முற்பட்ட திருடனுக்கு கண்பார்வை இழக்கச்செய்து பின்னர் 48 நாட்களில் அவன் சுவாமியை பிரார்த்திக்க கண்ணொளி பெற்றது எனப்பல அதிசய சம்பவங்கள் நடந்தேறிய புண்ணியத் தலமாக இத்தலம் விளங்குகிறது. சித்திரை பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ராமநவமி, ஆடி 18, உரியடி உற்சவம், புரட்டாசி நவராத்திரி எனப் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. |
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை |
அருள்மிகு கோட்டை அழகிரி நாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு கோட்டை அழகிரி நாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
சேலம் கோட்டை,
பழைய பஸ் நிலையம் அருகே.
சேலம் 636008. |
+91 9942814937. | சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தூரம். புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4கிமீ தூரம். சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சவுந்தரவல்லி தாயார் பெயர். கருடவனம் என்னும் தாக்ஷாரண்யம் என்றழைக்கப்பட்ட இத்தலத்தில் விகனஸமுனிவர், பிருகு மற்றும் சிபிச்சக்ரவர்த்தி வழிபட்டது. மாறவர்ம சுந்தர பாண்டியன், ஹொய்சால, விஜயநகர, நாயக்க மன்னர்கள் மற்றும் ஆங்கிலேய கலெக்டர் டபிள்யூ.டி. டேவிஸ் திருப்பணி செய்தனர். கிபி 9 நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டது. சம்மோஹன லக்ஷ்மி சரிபாதியாக இணைந்த சுதைச் சிற்ப வடிவம் கொண்டது. கிருத யுகத்தில் ஆதிசேஷன் சாப விமோசனம் பெற்றதால் ஆதிசேஷபுரம் என்றும், திரேதாயுகத்தில் மகாமண்டபம் பொருந்தி அமைந்த சதுர்வேதிமங்கலம் என்றும், துவாபர யுகத்தில் பகவான் முரனுக்கு அரியாக வந்து அருளியமையால் முராரி என்றும் அழகிய முரகிரி நரதன் என்றும், கலியுகத்தில் மலைகள் அமைந்த பகுதியில் திருமகள் திருமணம் புரிந்தமையால் சைலம் என்கிற பெயரோடும் திகழ்கின்ற தலம். |
வளர்ந்த இந்தப் பூமியில் முற்காலத்தில் நீதிமன்றங்களே கிடையாதாம். சைலபுரம் என்கிற பெயரில் சைலம் என்கிற சொல் வெள்ளைக்காரன் வாயில் நுழையாததால் அதுவே மருவி சேலம் ஆனது. பிருகு மகரிஷிக்குப் பிரத்யக்ஷம். மகாலக்ஷ்மியினைத் தன் மார்பில் தரித்திருக்கும் பெருமாளை தாயார் விடுத்து அவரை மட்டுமே கற்றுவேன் எனக் கூறியதால் சாபம் பெற்று பின்னர் 5 க்ஷேத்திரங்களில் பெருமாளை நோக்கித் தவமிருந்து மகாலக்ஷ்மியினை பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்தத் தலங்களில் இது ஒன்று. மற்ற நான்கு - பத்மாவதியினை மணம் முடித்தத் திருப்பதி, ஆண்டாளை மணம் முடித்த ஸ்ரீவில்லிபுத்தூர், வஞ்சுலவல்லியை மணந்த நாச்சியார் கோயில், பூமாதேவியினை மணந்த உப்பிலியப்பன் கோயில் ஆகும். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலம். பெண் பார்க்கும் படலம் இந்தக்கோயில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. இன்றும் இத்தலத்தில் பெண் பார்த்தவுடன் நிச்சயம் ஆகிறது. ஏகாந்த சேவையில் பெருமாளை சனிக்கிழமை வணங்கினால் திருமண பாக்கியம் கிட்டும். பெருமாள் பிரசாதமான பால் உட்கொண்டால் மகப்பேறு பாக்கியமும் உடன் கிட்டும். இல்லையென்று சொல்லத் தெரியாதப் பெருமாள். வரப்பிரசாதி. சுதர்சனர் சன்னிதியும் உள்ளது. ஆஞ்சநேயர் பிரம்ம பட்டம் பெறுவதற்காகக் கிளம்பிய போது இப்பெருமாளின் அழகைக் கண்டு இங்கேயே தங்கியதாகத் தகவல். பெருமாளுக்கு உகந்த நாள் ஏகாதசி (11), உகந்த எண் 11 என்பதாலும் இந்த ஆஞ்சநேயர் 11 அடி உயரம். கொடி மரத்திற்கு நேர் எதிரே பெரிய திருவடியும் பின் பகுதியில் ஆஞ்சநேயரும் சேவை சாதிக்கின்றனர். உற்சவம் இல்லாத நாட்களே கிடையாது. மேலும் பவித்ரோற்சவம் மிகவும் விமரிசையாக ஓர் மினி சம்ப்ரோக்ஷணம் போல் செய்யப்படுகிறது என்றால் அது மிகையாகாது. அதிலும் வைதீக நியமங்கள் நன்கு அனுஷ்டிக்கப்பட்டு இந்தப் பவித்ரோற்சவம் நடைபெறுகிறது, மார்ச் 2011ல் கும்பாபிஷேகம். அழகிரிநாதப் பெருமாள் சுந்தரவல்லி தாயார். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு சின்ன திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு சின்ன திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
சேலம் நகரம்,
சேலம் 636001.
|
+91 427-6505743, 9788591813, 9443610871. | சேலம் நகரிலிருந்து கள்ளக்குறிச்சி சாலையில் 4 கிமீ தூரத்தில் உள்ள சின்ன திருப்பதி பேருந்துநிலையத்திற்கு அருகில் கோயில். சென்னையிலிருந்து தம்மம்பட்டிக்கு நேரடிப் பேருந்து உள்ளது. சேலம் ஆத்தூர் பாதையில் ஆத்தூருக்கு முன் உள்ளது சேலத்திலிருந்து 24 கிமீ. |
200 ஆண்டுகளுக்கு முன் தென் ஆற்காட்டில் உள்ள சேடலூரில் வாழ்ந்த வேத விற்பன்னர் ஸ்ரீமான் ரங்கநாதய்யருக்கு மகனாகப் பிறந்த ராகவாச்சாரியாரை தாம் இருக்கும் இடத்திற்கு வந்து சேர் எனப்பெருமாள் கூறிவிட்டு மறைந்தார். கால்போன போக்கில் சென்ற அவருக்கு ஆதிசேஷன் மாடு மேய்ப்பவர்கள் இருந்த பகுதியில் வழிகாட்டி மறைந்தது. அங்கு அகில் மணம் ததும்ப இருந்த இடத்தில் மக்கள் தேங்காய் பழம் முதலியவற்றோடு இவரை தரிசித்து ஆசி பெற்றனர். ஊர்ப் பெரியவர் ஒருவரும் பெருமாள் கனவில் கூறியதாகக் கூறி அதே இடத்தில் கோயில் அமைக்க உதவ முன் வந்தார். அவ்வூர் மக்கள் திருப்பதி செல்ல வசதியில்லாத ஆதங்கத்தைப் போக்கவே அங்கே எழுந்தருளப் போவதாகவும் ஆதிசேஷன் மறைந்த இடத்தில் துளசிமாடம் அமைத்து வழிபடவும் பணித்தார். பின்னர் அந்த இடத்திலேயே புற்றின் அருகில் அருவமாக தான் கிடைப்பேன் என்றும் வேறு சிலைகள் நிர்மாணம் செய்ய வேண்டாம் எனவும் கனவில் உணர்த்தினார். இன்றும் கருவறைப் புற்றிற்கே ஆராதனைகள் நடைபெறுகிறது. திருப்பதி போலவே திருவாராதனைகள் கடைபிடிக்கப்படுகிறது. புற்று மண் நெற்றியில் இட நோய் அகலும் என்றும் திருவாராதனைகள் தீர்த்தம் கண்களில் விட கண் நோய் நீங்கும் என்கிற ஐதீகமும் உள்ளது. வேத புஷ்கரணியும் ஆலமரம் தல விருக்ஷமாகவும் உள்ளன. புரட்டாசிமாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வாகனத்திலும் வைகுண்ட ஏகாதசி அன்று சேஷ வாகனத்திலும் அருள் பாலிக்கிறார். |
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை, காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை. |
|
|