அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் திருக்கோயில்,
மெலட்டூர், தஞ்சாவூர் |
தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில் மெலட்டூர் உள்ளது. |
விநாயகருக்கு திருக்கல்யாணம் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதில் மெலட்டூரில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு மிகவும் விசேசம். ஏனென்றால் ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களில் 81 வது ஸ்தலமாக ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் உள்ளது. இத்திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா நடைபெறும் 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7ம்நாள் அன்று திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணத்திற்கு முன்னதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலவகையான சீர்வரிசைகளை கொண்டுவருவரார்கள். அதன் பின் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்திக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். |