உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று. அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு வாழ்ந்த அவரது அறிவுரைகளை பின்பற்றுவோம்
*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம்.
*வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாகட்டும்.
*எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு என கடவுளிடம் வழிபாடு செய்யுங்கள்.
*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.
*யாரையும் தவறாக நினைக்கக் கூடாது. மற்றவரிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும்.
* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மேலான மகிழ்ச்சி. கடவுளின் திருநாமத்தைச் சொல்வதே பேரின்பம்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.
* கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.
* காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.
* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.
*தேன் என்று சொன்னால் மட்டும் இனித்து விடாது. அது போல சேவை என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும்.
*மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மந்திரச் சொல். இதை மதித்து நடந்தால் மகாதேவனே மகிழ்ந்து அருள்புரிவான்.
*தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்கு சமமானது.
*தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே.