திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஜனகவல்லி தாயார் வைகுண்ட வாசகப் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழா கடந்த 21 ம் தேதி காலை 9:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து இரவு ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. விழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து ராஜ வீதி வழியாக இழுத்துச் சென்றனர். திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் வகையறாக்கள் செய்திருந்தனர்.