காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை



கோவை; அன்னூர் வட்டம் சர்க்கார் சாமக்குளம் - கோவில்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதன் தொடர் நிகழ்வாக இன்று தட்சிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வானது மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 7 மணிக்கு நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பூக்களால் லட்சார்ச்சனை செய்தனர். இதில் மூலவர் சுவாமி தட்சிணாமூர்த்தி சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்