திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வசந்தகால உத்சவம் விழா நிறைவு



திருப்போரூர்; திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில், வசந்த உத்சவ விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான விழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் நடைபெற்று வந்த விழாவில், உற்சவ மூர்த்தியான கந்த சுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கோவிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்றன. பின், மீண்டும் கோவிலுக்குச் சென்றடைந்தார்.


இறுதி நாளான இன்று கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையை திருமணம் முடிக்கும் வைபவத்துடன், இனிதே நிறைவுபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அதேபோல், நேற்று சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, திருப்போரூர் கைலாசநாதர் கோவில், தண்டலம் பெரியப்பாளையத்தம்மன் கோவில், கங்கையம்மன் கோவில், செங்கண்மாலில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல், மானாமதி சீரங்கத்தம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விளக்கு பூஜையும், வெள்ளி கவசம் அணிவித்தல் விழாவும் நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்