சோழவந்தான்; சோழவந்தான் வைகை ஆற்றில் இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பச்சை பட்டுடன் இறங்கிய அழகரை பக்தர்கள் தரிசித்தனர்.
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடக்கின்றன. 3ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் பச்சை பட்டு உடுத்தி வென் குதிரைக்கு பதில் முதல் ஆண்டாக தங்க குதிரையில் எழுந்தருளினார். சனீஸ்வர பகவான் கோயிலில் அழகருக்கு எதிர்சேவை நடக்க, மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் புடை சூழ வைகை ஆற்றில் அழகர் காலை 9:35 மணிக்கு இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியினர். 100 க்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினர்.