பழநி; பழநி ஆவணி மூல வீதியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்த பூஜை நடைபெற்றது. பழநி ஆவணி மூல வீதியில் சித்ரகுப்த பூஜை, சித்திரை மாத சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடந்தது. சித்திரகுப்த சுவாமிக்கு வாழை மரத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. இதில் அதில், பொரிகடலை, வெல்லம், கொய்யா, வாழை, இளநீர், மாம்பழம், உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் மற்றும் காய்கறிகளை படைத்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 83 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. இதில் சித்ரகுப்த வரலாறு படிக்கப்படும். இந்த பூஜையில் கலந்து கொள்பவர்க்கு செல்வம், குழந்தை பேறு, ஆயுள் விருத்தி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.