வடமதுரை பெருமாள் கோயில்களில் சித்ரா பவுர்ணமி விழா



வடமதுரை; வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 75ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று துவங்கியது. கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் மே 14 இரவு வரை நடைபெறும். மே 15 காலை சுவாமி சன்னதி திரும்புவார்.


* பாடியூர் புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி வீருசக்தி விநாயகர், வீருதும்மம்மன் மாலைக்கோயிலில் பெருமாள் அழைப்புடன் துவங்கிய சித்ரா பவுர்ணமி விழாவில், சங்கு பூஜை, யாக வேள்வி, தீர்த்தம், பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் தசிரிவார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.


* தென்னம்பட்டியில் சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. பல்வேறு கிராமங்களில் வசிக்கும் கோயில் தலைகட்டுதாரர்கள் அவரவர் ஊர்களில் இருந்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து சன்னதிகளில் பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர். இங்குள்ள சமுதாய கூட திறப்பு விழாவில் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிச்சாமி பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்