பண்ருட்டி; பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்தது. 9ம் நாள் உற்சவமான இன்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், துணை சேர்மன் சிவா, தொழிலதிபர்கள் சரவணன், வைரக்கண்ணு, அருள், ராஜ்மோகன், தேவராஜன், ஆடிட்டர் தியாகராஜன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், மண்டல தலைவர் சண்முகம், மோகனகிருஷ்ணன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (13ம் தேதி) காலை 8:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.